ஜெர்மனி நாட்டில் நீண்ட காலமாகக் குடியுரிமை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்க வேண்டும் என்ற பேச்சு அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், நிறுவனங்கள், அரசியல் வட்டாரங்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு கூட மொழி தொடர்பான கட்டுப்பாடுகளிலும், விதிமுறைகளிலும் தளர்வு அளிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஜெர்மனி நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை சட்ட தளர்வுகளுக்கு 382-க்கு 234 வாக்குகள் பெற்று நடைமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இப்புதிய சட்ட திருத்தம் மூலம் ஜெர்மனியில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறும் விதிமுறைகளில் தளர்வுகளும், இரட்டை குடியுரிமை விதிமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தளர்வுகள் மூலம் ஜெர்மனியில் இருக்கும் நிறுவனங்கள் மிகவும் எளிதாகவும், அதிகளவிலும் திறமையான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடியும்.
ஜெர்மனி அரசு தற்போது திருத்தம் செய்துள்ள மாற்றங்கள் மூலம் ஒருவர் அந்நாட்டில் 5 வருடம் தங்கியிருந்தாலே குடியுரிமை பெற முடியும், இதேபோல் சிறப்புத் தனித் திறன் கொண்டவர்கள் வெறும் 3 வருடத்திலேயே குடியுரிமை பெற முடியும், முன்பு இது 8 மற்றும் 6 வருடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஜெர்மனியில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை வெளிநாட்டவராக இருக்கும் பட்சத்தில் யாரேனும் ஒருவர் 5 வருடம் ஜெர்மனியில் தங்கியிருந்தாலே போதும், குழந்தைக்கு ஜெர்மனி குடியுரிமை பெற முடியும். முன்பு இப்பிரிவில் குழந்தைக்குக் குடியுரிமை பெற பெற்றோர் ஜெர்மனி குடியிருப்புக் காலம் 8 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி நாட்டு மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், இதில் 5.3 மில்லியன் மக்கள் ஜெர்மனியில் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக வசித்து வருகிறார்கள் என்பதை விளக்கி இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டு நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வெளிநாட்டினரை பணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு இலங்கையில் இருந்து பல ஆயிரம் மக்கள் ஜெர்மனியில் வசித்து வரும் வேளையில் அவர்களுக்கும் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஜெர்மனியில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் வேளையில் இவர்களுக்குக் குடியுரிமை பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications