சீனா-வுக்கு கட்டும் கட்டும் ஜெர்மனி.. இப்ப இது தேவையா குமாரு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மனி நாட்டின் பொருளாதார அமைச்சகம், ஆசியாவின் பொருளாதார வல்லரசு நாடான சீனா-வை சார்ந்து இருப்பதைக் குறைக்க முற்படுகிறது.

சீனாவுடனான வணிகத்தைக் கவர்ச்சியற்றதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது என இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 வருடத்தில் 10 மல்டிபேக்கர் பங்குகள்.. 29 வயதான ஐஐடியன் சாதித்தது எப்படி? 5 வருடத்தில் 10 மல்டிபேக்கர் பங்குகள்.. 29 வயதான ஐஐடியன் சாதித்தது எப்படி?

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி தற்போது சீனாவிற்கான முதலீடு மற்றும் ஏற்றுமதி உத்தரவாதங்களைக் குறைப்பது அல்லது முழுமையாக அகற்றுவது, வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் மேலாளர் பயிற்சியை மேம்படுத்தும் பணிகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தோனேசியா

இந்தோனேசியா

வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தவும், ஜனநாயக நாடுகளுடன் வணிகத்தை அதிகரிக்க முயற்சிக்கும் வகையில், இந்தோனேசியா போன்ற பிற ஆசிய நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு அரசு கடன்களைத் திருப்பலாம் எனத் தெரிவித்துள்ளது.

சீன முதலீடுகள்

சீன முதலீடுகள்

மேலும் இந்தியாவைப் போலவே ஜெர்மனியில் சீன முதலீடுகள் மட்டுமல்லாமல், சீனாவில் ஜெர்மன் முதலீடுகள் ஒவ்வொன்றையும் பரிசீலித்து வருகிறது என்றும், இனி வரும் முதலீடுகளையும் சரி பார்த்து அனுமதிக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக வர்த்தக அமைப்பு
 

உலக வர்த்தக அமைப்பு

கூடுதலாக, ஜெர்மனி ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளின் குழுவுடன் சேர்ந்து, சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளிக்க அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ஐரோப்பிய சந்தையில் மிகவும் முக்கியப் பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி, ரஷ்யா தனது எரிவாயு விநியோகத்தை மொத்தமாக நிறுத்திய நிலையில் உலகமே எதிர்த்து வரும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வரும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நிலைமையைச் சமாளித்து வருகிறது.

சீனா

சீனா

இந்த நிலையில் உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா உடனான வர்த்தகத்தைக் குறைக்கத் திட்டமிட்டும், அதற்கான பணிகளைச் செய்து வருகிறது ஜெர்மனி. உலகமே சீனாவின் உற்பத்தி நிலை கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாறாதா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதற்குக் காரணம் பணவீக்கம்.

சரியா

சரியா

ஒருபக்கம் ரஷ்யா-வில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் வேளையில் ஐரோப்பிய மத்திய வங்கி 60 நாளில் 2 முறை வட்டியை உயர்த்தியதுள்ளது. இந்த நிலையில் சீனா உடனான வர்த்தகத்தைக் குறைக்கத் திட்டமிடுவது சரியா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Germany govt reviews measures to curb China business and investment

Germany govt reviews measures to curb China business and investment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X