வளைகுடா பகுதியில் நீடித்து வரும் 3 நாடுகள் மத்தியிலான போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட பாதிப்புகள், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனியை உலுக்கி வருகிறது. குறிப்பாக மின்சார விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், அரசு புதிய மாற்று தீர்வுகளை ஆராய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு உள்ளது.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் கிளீன் எனர்ஜி மீது அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உடனடி மாற்று தீர்வாக என்ன இருக்க முடியும்..? ஜெர்மனி அரசு தற்போது 'ஸ்டாண்ட்பை' நிலையில் உள்ள அதாவது பயன்படுத்தப்படாத நிலையில் நிலக்கரி மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்களை மீண்டும் முழுவேகத்தில் செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இது எரிபொருள் விலையை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி, கடந்த சில ஆண்டுகளாக கிளீன் எனர்ஜி மாற்றத்தில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. 2024-ல் மொத்த அந்நாட்டின்மின்சார பயன்பாட்டில் 58% மற்றும் 2025-ல் சுமார் 56% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலம் கிடைத்துள்ளது. காற்றாலை மற்றும் சோலார் மின்சாரம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மேலும், 2030க்குள் 80% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறவும், 2045க்குள் கார்பன் நியூட்ராலிட்டி அடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி இந்த இலக்குகளை தற்காலிகமாக சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
நிலக்கரிக்கு மீண்டும் திரும்பும் நிலை
இந்த புதிய ஆய்வு, ஜெர்மனி மீண்டும் 'லிக்னைட்' (brown coal) எனப்படும் சுற்றுசூழல் மாசு அதிகம் உண்டாக்கும் நிலக்கரியை பயன்படுத்தும் நிலைக்கு திரும்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. முன்பு, ஜெர்மனியின் மின்சார உற்பத்தியின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியிலிருந்தே கிடைத்தது. அதில் பெரும்பகுதி லிக்னைட் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
ஜெர்மனி உலகின் மிகப்பெரிய லிக்னைட் உற்பத்தியாளராகவும் இருந்தது. 2038க்குள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தும் திட்டம் ஜெர்மனி அரசுக்கு இருந்த நிலையில், தற்போதைய சூழல் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியிலான போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு விலை அதிகரித்துள்ளது. இது மின்சார உற்பத்தி விலையையும் பாதிக்கிறது.
ரஷ்யா எரிவாயு இழப்பு
2022-ல் ரஷ்யா வழியாக கிடைத்த இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டதிலிருந்து, ஜெர்மனி அதிக விலைக்கு LNG (Liquefied Natural Gas) இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவும் மின்சார விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலைமையில், குறைந்த செலவில் உள்நாட்டு எரிபொருள் ஆதாரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. அதனால் தான் நிலக்கரி மின் நிலையங்களை மீண்டும் இயக்குவது குறித்து அந்நாட்டு அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்த மாற்றம், ஜெர்மனி போன்ற வல்லரசு நாடுகளுக்கே எரிபொருள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது. ஒரு பக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றொரு பக்கம் பொருளாதார அழுத்தம் என்ற இரு சவால்களுக்கிடையில் சமநிலை காண வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மனி மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து நாடுகளும் உள்ளது.
உலக நாடுகள் கிளீன் எனர்ஜி பாதையில் சென்றாலும், அவசர காலங்களில் நிலக்கரி தான் முக்கிய ஆதாரமாக மாறுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications