ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி நாட்டில் தற்போது மிகப்பெரிய அளவில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க ஜெர்மனி அரசு தீவிரமாக இந்தியாவிலிருந்து திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.
இந்தியத் தொழில் வல்லுநர்கள் ஜெர்மனி நாட்டில் குடியேறவதை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் புதிய குடியேற்ற நடவடிக்கைகளை அந்நாட்டின் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியத் தொழில் வல்லுநர்கள் ஜெர்மனி நாட்டில் குடியேறுவதை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் புதிய குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் ஜெர்மனியின் வளர்ந்து வரும் பொருளாதார கூட்டாண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, இதேவேளையில் இந்திய வல்லுனர்களுக்கு ஜெர்மனி கார்ப்பரேட் துறையில் கிடைக்கும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் வயதான மக்கள் தொகை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றின் மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளது. குறிப்பாக பிரெக்சிட், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைகள், தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பம் வளர்ந்தது என பல வகையில் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
புதிய குடியேற்றக் கட்டமைப்பில் இந்திய தொழிலாளர்களுக்கான விசா செயல்முறையை மிகவும் எளிதாகவும், வேகமாகவும் செயல்படுத்த 30க்கும் அதிகமான மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் விசாக்களை டிஜிட்டல் மயமாக்குவது மூலம் பிராசஸ் செய்யும் நேரத்தைப் பெரிய அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெர்மனி அரசு இந்தியாவைச் சேர்ந்த திறமையான ஊழியர்களுக்கான விசா செயல்முறையை 9 மாதத்தில் இருந்து 2 வாரங்களாக குறைத்துள்ளது. இதன் மூலம் 400000 திறன் வாய்ந்த ஊழியர்கள் பலன் பெற்றுள்ளனர்.
மேலும் ஜெர்மனி நாட்டில் வேலைக்காகச் செல்லும் பிற நாட்டவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை மொழி. ஜெர்மனி அரசு அந்நாட்டு நிறுவனத்தில் வேலையைப் பெற மொழி சார்ந்த தடையைச் சமாளிக்க, ஜெர்மன் அரசு தொழிலாளர்களுக்கு ஜெர்மன் மொழி வகுப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், திறமையான வேலைவாய்ப்பில் (Skilled jobs) சுமார் 23,000 இந்தியத் தொழில் வல்லுநர்கள் இருந்தனர். 2024 பிப்ரவரி மாத இறுதியில், இந்த எண்ணிக்கை 495% அதிகரித்து 137,000 ஆக உயர்ந்தது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், கூடுதலாக 23,000 இந்தியத் தொழிலாளர்கள் ஜெர்மனியில் வேலை கிடைத்தது.


Click it and Unblock the Notifications