ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் துவங்கிய பின்பு ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி, அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்த பல முக்கியமான திட்டங்களை தீட்டியுள்ளது. உற்பத்தி முதல் சேவை துறை வரையில் அனைத்திலும் வர்த்தகத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
இந்த கொள்கை மாற்றத்திற்கு மத்தியில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலான ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டினருக்கு ஜெர்மானிய மொழி கட்டுப்பாடிலும் சில தளர்வுகளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது.
இந்த நிலையில் ஜெர்மனி புதன்கிழமை பல கொள்கை மாற்றங்களை அறிவித்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஜெர்மனி அரசு
ஜெர்மனி அரசு புதன்கிழமை குடியேற்றம், திறன் பயிற்சி மற்றும்
ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே இருந்து வரும் மக்களுக்கு குடியேற்றத்தை ஊக்குவித்தல் தொடர்பான கொள்கை சீர்திருத்தங்களை வெளியிட்டது. இந்த சீர்திருத்தை வெளியிட முக்கியமான காரணம் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க ஓலாஃப் ஸ்கோல்ஸின் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஹூபர்டஸ் ஹெய்ல்
எங்கள் திறமையான தொழிலாளர் தளத்தை பாதுகாப்பது ஜெர்மனியின் மிகப்பெரிய பொருளாதார பணிகளில் ஒன்றாகும் என்று தொழிலாளர் அமைச்சர் ஹூபர்டஸ் ஹெய்ல் கூறினார். 2022 இல் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கு மிக உயர்ந்ததாக இருந்தது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
60000 ஊழியர்கள்
இப்புதிய சீர்திருத்தம் மூலம் ஐரோப்பா யூனியனுக்கு வெளியில் இருந்து வருடத்திற்கு சுமார் 60000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனி நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை
ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் வர்த்தகம் அனைத்தும் ரஷ்யா போரால் பாதிக்கப்படுவதை காட்டிலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த வருட இறுதியில் இருந்து குடியேற்ற விதிகளில் சீர்திருத்தம் கொண்ட வர முயற்சிகள் மேற்கொள்ள வரப்பட்டு வருகிறது.
3 பிரிவுகள்
தற்போது ஜெர்மனி அரசு 3 பிரிவுகளில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்கிறது.
1 . ப்ரொபஷனல் அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள்
2 . குறைந்தது 2 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள்
3. இதுதான் புதியது, opportunity card வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் ஜெர்மனியில் வேலை தேடிக்கொள்ள முடியும் என நம்புவோர் இந்த வாய்ப்பை தேர்வு செய்து ஜெர்மனியில் குடியேறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications