இந்திய வாகன விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இனி எதிர்காலம் என்பதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களில் பிரிவில் அதிகப்படியான வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மத்திய அரசு கொடுக்கும் மானியமும், மாநில அரசு கொடுக்கும் சலுகைகளும் தான்.
ஆனால் இதுநாள் வரையில் மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி கனரக வாகனங்களுக்கு எவ்விதமான சலுகையும் அளிக்கவில்லை. இதேபோல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இப்பிரிவில் தீவிரமாக இறங்காத நிலையில், சமீபத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் மத்திய அரசு தரப்பில் இருந்து மாபெரும் மானிய திட்டத்துடன் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டீசல் டிரக்குகள் என்பது மொத்த வாகன எண்ணிக்கையில் வெறும் 3% மட்டுமே, ஆனால் போக்குவரத்து உமிழ்வில் இந்த 3 சதவீத டீசல் டிரக்குகள் சுமார் 42% பங்களிக்கின்றன என்று மத்திய அமைச்சர் குமாரசாமி குறிப்பிட்டார். இந்த உமிழ்வை குறைக்க, மத்திய அரசு எலக்ட்ரிக் டிரக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் சரி செய்ய முடியும் என நம்புகிறது.
எச்.டி.குமாரசாமி முக்கிய அறிவிப்பு: இப்புதிய திட்டத்தை இன்று வெளியிட்ட மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பிஎம் இ-டிரைவ் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு முதல் முறையாக ஊக்குவிப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் வாகன உமிழ்வைக் குறைத்து, 2070 ஆம் ஆண்டுக்குள் நெட் ஜீரோ உமிழ்வு இலக்கை அடையும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
PM E-DRIVE initiative for electric trucks: இந்த திட்டத்தின் கீழ் , இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகையை மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) கீழ் வரையறுக்கப்பட்ட N2 மற்றும் N3 வகை எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு வழங்கப்பட உள்ளது.
9.6 லட்சம் ரூபாய் மானியம்: இந்த மானியம், வாகனத்தின் மொத்த எடையைப் பொறுத்து மாறுபடும் என கூறிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி, ஒரு வாகனத்திற்கு அதிகபட்சமாக 9.6 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என விளக்கம் கொடுத்தார்.
மேலும் இந்த மானிய தொகை எலக்ட்ரிக் டிரக்குகளை வாங்கும் போதே அதன் விற்பனை விலையில் மூலம் வழங்கப்படும், மேலும் இந்த மானியம் முதல்-வருபவர்களுக்கு முதலில்-வழங்கப்படும் (first-come, first-served) எனவும் வரையறுக்கப்பட்டு உள்ளது. பிஎம் இ-டிரைவ் இணையதளம் மூலம் உற்பத்தியாளர்களுக்கு இத்தொகை திருப்பி அளிக்கப்படும், வாடிக்கையாளர்கள் கைகளுக்கு வராது.
இந்த திட்டம் வாயிலாக சுமார் 5,600 எலக்ட்ரிக் டிரக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லியில் காற்று தரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் 1,100 எலக்ட்ரிக் டிரக்குகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150 எலக்ட்ரிக் டிரக்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் டிரக்குகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, உற்பத்தியாளர்கள் விரிவான வாரென்டி வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிலோமீட்டர் வரையில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இதேபோல் வாகன மோட்டார்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 2.5 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதம் ஆகியவையும் வழங்கப்படும். இவற்றில் எது முதலில் நிறைவடைகிறதோ அது பொருந்தும்.
இந்த உத்தரவாதங்கள், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும், மேலும் எலக்ட்ரிக் டிரக்குகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும். இந்த ஊக்குவிப்பு திட்டம், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையை மலிவாக்குவதோடு, எலக்ட்ரிக் டிரக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications