நம் நாட்டில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக உருவெடுத்துள்ளது. பள்ளியில் சேர்ப்பதற்கு, வங்கி கணக்குகள் திறப்பதற்கு, மொபைல் சிம் கார்டு பெறுவதற்கு, அரசாங்கத் திட்டங்களில் சேர்வதற்கு என அனைத்திற்கும் ஆதார் கார்டு அவசியம். இருப்பினும் ஆதார் தொடர்புடைய மோசடிகள் அதிகரித்து வருவதால், பலர் தங்கள் ஆதார் நம்பரை வழங்க தயங்குகின்றனர். தனியுரிமை குறித்து அக்கறை கொண்டவர்களுக்கும், ஆதார் எண்ணை பகிர விரும்பாதவர்களுக்கும் விர்ச்சுவல் ஐடி ஒரு பாதுகாப்பான மாற்றாக அமைகிறது.
விர்ச்சுவல் ஐடி என்றால் என்ன?: விர்ச்சுவல் ஐடி என்பது தனித்துவமான 16 இலக்கு ஐடியாகும். ஆதார் நம்பர் எங்கெங்கு தேவைப்படுகிறதோ, அதற்கு பதிலாக ஆதார் நம்பரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முற்றிலும் பாதுகாப்பை வழங்குகிறது. அதோடு உங்கள் ஆதார் தகவல்கள் மோசடியாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் UIDAI இணையதளம் மூலமாக விர்ச்சுவல் ஐடியை உருவாக்கலாம். இந்த ஐடி e-KYC முடிப்பதற்கு, வங்கி கணக்குகளை திறப்பதற்கு, அரசு சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவதற்கு, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு என பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தலாம்.
ஆன்லைனில் விர்ச்சுவல் ஐடியை பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். ஃபிஷிங் மோசடிகளைத் தவிர்க்க நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
ஸ்டெப் 2: உங்கள் வசதிக்கேற்ப இந்தி அல்லது ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுக்கவும். "ஆதார் சர்வீசஸ்" என்ற பிரிவின் கீழ் விர்ச்சுவல் ஐடி ஜெனரேட்டர் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் 12 இலக்க ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சா கோடை வழங்கவும்.தற்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 4: உங்களுடைய 12 இலக்கு ஆதார் நம்பர், கேப்ட்சா கோட் மற்றும் உங்கள் மொபைல் நம்பரில் பெறப்பட்ட ஓடிபி ஆகியவற்றை வழங்கவும். அதன் பிறகு உங்களுடைய விர்ச்சுவல் ஐடி திரையில் தோன்றும். இந்த விர்ச்சுவல் ஐடி உங்கள் மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் வழியாக அனுப்பப்படும்.
SMS மூலம் விர்ச்சுவல் ஐடியை பெறுவது எப்படி?: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து RVID என டைப் செய்து உங்களுடைய ஆதார் நம்பரின் கடைசி 4 இலக்கங்களை சேர்த்து 1947 என்ற நம்பருக்கு அனுப்பவும். சில வினாடிகளுக்குள் உங்களுடைய விர்ச்சுவல் ஐடி எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படும்.


Click it and Unblock the Notifications