ஆதார் கார்டை வைத்து ரூ.10,000 லோன் பெறுவது எப்படி? சில மணி நேரங்களில் பணம் உங்கள் வங்கி கணக்கில்!

அவசரக்கால பணத் தேவைகளுக்கு பலரும் பர்சனல் லோன்களையே நம்பியுள்ளனர். ஆனால் வங்கிகளுக்கு சென்று பர்சனல் லோன் பெறுவதில் சில தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. ஆனால் தற்போது ஆதார் கார்டை அடிப்படையாகக் கொண்டு தனி நபர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை வசதியானதாக மட்டுமின்றி குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் விரைவான ஒப்புதலுடன் கிடைக்கிறது. இந்த வகை கடன்கள் உடனடி பண தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான லோனில் வெறும் ஆதார் கார்டை மட்டுமே வைத்து 10,000 ரூபாய் வரையிலும் லோன் வழங்கப்படுகிறது. உடனடியாக பணத் தேவை ஏற்பட்டால் இந்த வசதியை பயன்படுத்தி பலனடையலாம். இந்தப் பதிவில் ஆதார் கார்டை வைத்து லோன் பெற என்னென்ன செய்ய வேண்டும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பது போன்ற விவரங்களைப் பார்ப்போம்.

 ஆதார் கார்டை வைத்து ரூ.10,000 லோன் பெறுவது எப்படி? சில மணி நேரங்களில் பணம் உங்கள் வங்கி கணக்கில்!

விரைவான செயலாக்கம்: ஆதார் அடிப்படையிலான கேஒய்சி ஒப்புதல் மற்றும் விரைவான செயலாக்கம் காரணமாக விரைவில் நீங்கள் லோன் பெறலாம்.

குறைந்தபட்ச ஆவணங்கள்: ஆதார் அட்டை அடையாள மற்றும் முகவரி சான்றாக செயல்படுவதால் பிற ஆவணங்களின் தேவையின்றி பணம் பெறலாம்.

யார் யார் லோன் பெற முடியும்?: சம்பளம் பெறுபவர்கள், சுய தொழில் தொடங்குபவர்கள் அல்லது குறைந்த கடன் வரலாற்றை கொண்ட தனிநபர்கள் இந்த கடனை பெற முடியும். 21 வயது முதல் 60 வயதுடைய யார் வேண்டுமானாலும் ஆதார் அடிப்படையிலான பர்சனல் லோன் பெற விண்ணப்பிக்கலாம்.

வருமானம்: மாதம் 15,000 என்ற குறைந்தபட்ச சம்பளம் பெறுபவர்களும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் கார்டை வைத்து ரூ.10,000 கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான ஸ்டெப்ஸ்:

உங்கள் கடன் வழங்குனரைத் தேர்வு செய்யவும்: ஆதார் கார்டை வைத்து தனி நபர் கடன்களை வழங்கும் வங்கி, NBFC நிறுவனங்கள் அல்லது ஃபின்டெக் தளங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆன்லைன் விண்ணப்பம்: கடன் வழங்குனரின் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அப்ளிகேஷனை பார்வையிட்டு விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். நீங்கள் பயன்படுத்தும் இணையதளம் மற்றும் ஆப்ஸ் அந்தந்த வங்கியின் பிரத்தியேக தாளங்களா? என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தற்போது மோசடிக்காக உண்மையை ஒத்த இணையதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆவணங்களைப் பதிவேற்றவும்: உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு அல்லது வருமானச் சான்று போன்ற பிற தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள். கேஒய்சி சரிபார்ப்புக்கு உங்கள் விவரங்களை சமர்ப்பியுங்கள். கடன் வழங்குநர் உங்கள் விவரங்களை சரி பார்ப்பார்கள். பின்னர் கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பெரும்பாலும் சில மணி நேரங்களுக்குள் இந்த கடன் வழங்கப்படும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்: நம்பகமான தளங்களைத் தேர்வு செய்யுங்கள். முன்பு சொன்னது போல் கடன் வழங்குபவர்கள் ஆர்பிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட வழங்குனரா?என்பதை உறுதிப்படுத்துங்கள். இதுதான் கடன் பெறுவதில் மிகவும் முக்கியமான பணி.

இன்றெல்லாம் ஆன்லைன் தளங்கள் அதிகரித்துவிட்டன. இவை கடன்களை வழங்கி அதற்கு அளவுக்கு அதிகமான வட்டியை வசூலிக்கின்றன. மேலும் சில தவணைகளை தவர விட்டால் கடன் பெற்றவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற அப்ளிகேஷன்களுக்கு எதிராக அரசு செயல்பட்டு வந்தாலும், இன்னும் சிலர் தெரியாத இணையதளங்களில் லட்சக்கணக்கான ரூபாயை இழக்கின்றனர்.

வட்டி விகிதங்கள்: செயலாக்க கட்டணங்கள் உட்பட கடனுடன் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். அதோடு சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+