பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை இன்னும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. மேலும் பல ஐபோன்களில் மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஐபோன் 15 ப்ரோவும் ஒன்று. இந்த உயர் ரக ஸ்மார்ட்போனுக்கு எந்த நிபந்தனைகளும் இன்றி ரூ.33,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஐபோன் 15 ப்ரோவின் டீல் விலை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு பிறகு, அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஐபோன் 15 ப்ரோ தள்ளுபடி: ஐபோன் 15 ப்ரோ மாடல், 128GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 1,01,999-க்கு பிளிப்கார்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஐபோன் இந்தியாவில் ரூ. 1,34,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக பிளிப்கார்ட் நிறுவனம் ரூ. 33,000 தள்ளுபடியை வழங்குகிறது. ஐபோன் ப்ரோ மாடலுக்கு இவ்வளவு பெரிய தள்ளுபடி இப்போது வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 ப்ரோ மாடலை வாங்க விரும்புவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் அக்டோபர் 6-ஆம் தேதிக்கு பிறகு விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்-இன் விற்பனைக்கான கடைசி தேதி இதுவாகும். கடந்த ஆண்டு பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்ட டீல் விலை சில மணி நேரங்களில் மாற்றியதற்காக இந்த இ-காமெர்ஸ் நிறுவனம் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு இதுபோன்ற எந்த செயலையும் பிளிப்கார்ட் நிறுவனம் செய்யவில்லை.
ஐபோன் 15 ப்ரோ மொபைலுக்கு ரூ. 33,000 தள்ளுபடியைத் தாண்டி இன்னும் அதிகமாக தள்ளுபடி பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் சில பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம். HDFC பேங்க் கிரெடிட் கார்டில் கூடுதலாக 3,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் ஐபோன் 15 ப்ரோவின் விலை 98,999 ரூபாயாக குறையும். ஆப்பிள் பிரியர்கள் இந்த சலுகையை பயன்படுத்தினால்.. போனின் செயல் திறனில் எந்தவித தியாகமும் இன்றி, அதே சமயம் விலை குறைவாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
விற்பனை முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளதால், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலையை ஏற்கனவே ரூ.2,000 உயர்த்தியிருப்பதால், இன்னும் விலையை உயர்த்த பிளிப்கார்ட் முடிவு செய்யலாம். தற்போது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ. 1,21,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது முன்பு ரூ.1,19,999-ஆக இருந்தது. ஆப்பிள் ஐபோன் பிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துவதன் மூலம் வெகுவாக சேமிக்க முடியும்.


Click it and Unblock the Notifications