2 மாத சம்பளத்தை தர தயார்..!! Gen Z இளைஞர்கள் எல்லாம் இப்படி மாறிட்டாங்களே..!!

இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. படித்து முடித்த இளைஞர்களுக்கு அத்தனை எளிதாக வேலை கிடைப்பது இல்லை. வேலைவாய்ப்பு நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் ஒரு ஜென் ஸீ இளைஞர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரி ஒருவர் தனக்கு வேலை பெற்று தருபவருக்கு தனது 2 மாத சம்பளத்தை முழுமையாக தருவதாக ரெட்டிட் பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

2 மாத சம்பளத்தை தர தயார்..!! Gen Z இளைஞர்கள் எல்லாம் இப்படி மாறிட்டாங்களே..!!

படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் பல இளைஞர்களை போல, இவரும் தொடர்ச்சியாக பல நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வந்துள்ளார். ஆனால், ஏஐ Screening Filters மற்றும் கடுமையான போட்டி காரணமாக நேர்காணல் அழைப்புகள் கூட தனக்கு வருவதில்லை என புலம்புகிறார்.

சாதாரண முறையில் விண்ணப்பித்து பயனில்லை, எனக்கு AI/ML அல்லது மென்பொருள் துறையில் வேலை வாங்கி தரும் நபருக்கு எனது முதல் இரண்டு மாத சம்பளத்தை அன்பளிப்பாக வழங்க தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். சாதாரண Referral கோரிக்கைகளுக்கு யாரும் முக்கியத்துவம் தராததால், வித்தியாசமான முறையில் சம்பளத்தை கமிஷனாக தருவதாக அறிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

Also Read

தன்னிடம் சரியான தொடர்புகள் இல்லாததால், நிறுவனங்களில் செல்வாக்குள்ளவர்கள் அல்லது சரியான வேலை வாய்ப்புகளை அறிந்தவர்கள் தமக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்த ஜென்ஸீ இளைஞரின் விசித்திர அறிவிப்பு இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

இன்றைய கடுமையான வேலைவாய்ப்பு சந்தையில் பட்டதாரிகள் படும் வேதனையை இது அப்பட்டமாக காட்டுவதாகவும், வேலையில்லாமல் தவிப்பவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க எத்தகைய எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர் என்பதை இது உணர்த்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended For You

மறுபுறம், புதிதாக படிப்பை முடித்த ஒருவர் தன் முதல் மாத சம்பளத்தை விட்டு கொடுப்பதாக கூறுவது முறையல்ல என்றும், முறையான நெட்வொர்க்கிங் மற்றும் பொறுமையின் மூலம் வேலை தேடுவதே சரியானது என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.

இருந்தாலும் தற்போது ஏஐ வருகையால் எண்ட்ரி லெவல் வேலைகள் அத்தனை எளிதாக கிடைப்பது இல்லை. இதனால் வேலைகிடைத்து ஒரு நிறுவனத்திற்குள் நுழைவது அத்தனை சாதாரணமாக நடப்பது இல்லை. இந்த இளைஞரின் பதிவு இன்றைய தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பிற்கான போட்டி எந்த அளவுக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது என்பதையும், வேலை தேடும் இளைஞர்கள் தங்களது எதிர்காலத்திற்காக எத்தகைய அதீத முயற்சிகளையும் செய்ய தயங்கவில்லை என்பதையும் காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+