உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், இந்த ஆண்டு செப்டம்பரில் தனது புதிய சாதனமான 'ஐபோன் ஏர்' (iPhone Air) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது, ஆப்பிள் இதுவரை தயாரித்த ஐபோன்களிலேயே மிக மெலிதானது ஆகும். வெறும் 5.6 மிமீ தடிமன் கொண்ட இந்த சாதனம், மிகவும் தரமான மற்றும் உறுதியான கிரேடு 5 டைட்டானியம் உலோக ஃபிரேமால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1,19,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிளாக் ஃப்ரைடே (Black Friday) விற்பனையின் மூலம் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது.
Black Friday என்றால் என்ன..?: பிளாக் ஃப்ரைடே (Black Friday) என்பது, அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி தெரிவிக்கும் நாளுக்கு அடுத்த நாளை குறிக்கும் ஒரு முக்கியமான ஷாப்பிங் தினமாகும். நன்றி தெரிவிக்கும் நாள் எப்போதும் நவம்பர் மாதத்தின் 4-வது வியாழக்கிழமை வரும் என்பதால், அதை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையே பிளாக் ஃப்ரைடே ஆகும்.

இந்த நாள், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீசன் தொடங்குவதை குறிக்கிறது. பிளாக் ஃப்ரைடே அன்று, பெரும்பாலான சில்லறை வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், மிக அதிகமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. இதன் காரணமாக, இது ஆண்டுதோறும் நடைபெறும் ஷாப்பிங் நாட்களில் மிகவும் பிஸியான மற்றும் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது.
ரூ.11,000 தள்ளுபடி பெறுவது எப்படி..?:இந்தியாவின் மிகப் பெரிய எலெக்ட்ரானிக்ஸ் விற்பனையகமான க்ரோமா (Croma), தனது வருடாந்திர பிளாக் ஃப்ரைடே விற்பனையை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐபோன் ஏர் சாதனத்தின் மீது ரூ.11,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் ஏர்-இன் உண்மையான விலை ரூ.1,19,900 ஆகும். முதலில், க்ரோமா நிறுவனம் நேரடியாக ரூ.7,000 தள்ளுபடி வழங்குகிறது. இதனால் விலை ரூ.1,12,900 ஆக குறைகிறது. அத்துடன், குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும்போது, கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது.
இந்த இரண்டு தள்ளுபடிகளையும் சேர்த்தால், மொத்தமாக ரூ.11,000 தள்ளுபடி கிடைத்து, ஐபோன் ஏர்-இன் விலை ரூ.1,08,900 ஆக குறைகிறது. கிரெடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு 6 மாதங்கள் வட்டியில்லா கடன் வசதியும் கிடைக்கிறது.
ஐபோன் ஏர் சிறப்பம்சங்கள் :ஐபோன் ஏர், அதன் வடிவமைப்பை போலவே உள்ளே இருக்கும் தொழில்நுட்பத்திலும் மேம்பட்டதாக உள்ளது. 5.6 மிமீ தடிமன் கொண்ட இது, மிகவும் உறுதியான ஐபோன் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் டைட்டானியம் ஃபிரேமை செராமிக் ஷீல்ட் பாதுகாக்கிறது.
ஆப்பிளின் சொந்த தயாரிப்பான A19 Pro சிப்செட் இந்த சாதனத்திற்கு சக்தி அளிக்கிறது. இதில் உள்ள 6-கோர் சிபியூ, வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத அளவுக்கு அதிவேக செயல்பாட்டை உறுதி செய்கிறது. மேலும், இது iPhone 17 Pro மாடல்களுக்கு பயன்படுத்தப்படும் அதே சிப்செட் இதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளேவை பொறுத்தவை 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR திரையை கொண்டுள்ளது. இது மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் செயல்பாடுகளுக்காக 120Hz வரை தானாக மாறும் புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) வருகிறது.
அதேபோல், கேமராவை பொறுத்தவரை 48MP பிரதான கேமரா அமைப்புடன், 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. செல்ஃபி கேமரா 18MP கொண்டதாகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், முன் மற்றும் பின் கேமராக்கள் இரண்டிலும் ஒரே நேரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஐபோன் ஏர், ஒரு நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. மேலும், பேட்டரி இடத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இது உலகளவில் e-SIM வசதி மட்டுமே கொண்ட சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Wi-Fi 7 போன்ற நவீன இணைப்புகளுக்கான புதிய N1 சிப் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. புதிய ஆக்சன் பட்டனை அழுத்துவதன் மூலம் பல செயல்பாடுகளை விரைவாக அணுகலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications