நம் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் "பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்" (PMMY). இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் தொடங்கும் அனைவரும் நிதி உதவி பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறுவது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? என்ற விவரங்கள் குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் எந்தவித அடமானமும் இல்லாமல் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது விவசாயம் செய்பவர்களோ பயன்பெற முடியாது. ஏனெனில் விவசாயம் செய்பவர்களுக்கு பிற திட்டங்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மத்திய அரசு இந்த முத்ரா கடன் திட்டத்தினை வழங்கி வருவதற்கான முக்கிய காரணம் சாமானிய மக்களும் வரும் காலங்களில் பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதற்காகத்தான். இந்தத் திட்டத்தின் மூலம் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஆனாலும் சரி.. அல்லது அதனை மேம்படுத்த விரும்புபவர்கள் ஆனாலும் சரி.. கடனை பெற்றுக் கொள்ளலாம். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது.
3 பிரிவுகளின் படி சிஷு, கிஷோர், தருண் என 3 வகைகளாகப் பிரித்து கடன் வழங்கப்படுகிறது. சிஷு திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 5,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற முடியும். அதேபோல தருண் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெற முடியும்.
இந்நிலையில் தற்போதைய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு இந்த ரூ. 10 லட்ச ரூபாய் வரம்பை தருண் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சமாக அரசு உயர்த்தி உள்ளது. இந்த ரூ.20 லட்ச ரூபாய் தொகை அனைவருக்கும் கிடைக்குமா? என்றால் அது கிடையாது. ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் தருண் பிரிவில் ரூ.10 லட்ச ரூபாய் கடன் பெற்று அதை சரியான முறையில் திருப்பி செலுத்தி இருந்தால்.. அவர்கள் மீண்டும் லோன் பெற விண்ணப்பித்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இது புதிதாக கடன் பெறுபவர்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முத்ரா கடன் திட்டத்தினை பயன்படுத்தி 50,000 வரை கடன் பெறுபவர்கள் 60% ஆகவும் மீதமுள்ள தருண் மற்றும் கிஷோர் ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்கள் 40% ஆகவும் உள்ளனர்.
முத்ரா கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வணிக வங்கிகள் என எந்த வங்கிக்கு சென்று வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க வேண்டும்.
அதேபோல உங்களிடம் நீங்கள் என்ன தொழில் செய்ய இருக்கிறீர்கள் என்பதற்கான தக்க ஆவணங்கள் இருக்க வேண்டும். அதில் எதிர்காலத்தில் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்ற கணிப்புகள் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். இந்த அனைத்து தகவல்களும், உங்களுடைய ஆவணங்களும் சரியாக இருந்தால் உங்களுக்கு முத்ரா கடன் கிடைக்கும். தகவல்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் வங்கிகள் உங்களுடைய விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் லோன் பெற விண்ணப்பிப்பதற்கு நீங்கள் மேலே கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு வங்கிக்கு சென்று அங்குள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் அந்த விண்ணப்பத்தோடு உங்களுடைய தொழில் சார்ந்த ஆவணங்கள், போட்டோ, அடையாளச் சான்று, முகவரி சான்று, நேட்டிவிட்டி சான்றிதழ், மேலும் நீங்கள் உங்கள் தொழிலுக்கு வாங்கிய இயந்திரங்களுக்கான ரசீதுகள் ஆகியவற்றின் விரிவான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின் வங்கி உங்களுடைய விவரங்களை சரி பார்த்துவிட்டு.. அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு கடன் வழங்கப்படும். நீங்கள் வழங்கிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சரியானதாக இல்லை எனும் பட்சத்தில் வங்கிகள் உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.
பலன்கள்: முத்ரா திட்டத்தின் மூலம் நீங்கள் பெரும் கடனுக்கான ஒட்டுமொத்த தொகைக்கும் நீங்கள் வட்டி செலுத்த வேண்டியதில்லை. மாறாக முத்ரா கார்டு மூலம் எவ்வளவு தொகையை செலவு செய்து இருக்கிறீர்களோ? அந்த தொகைக்கான வட்டியை மட்டும் செலுத்தினால் போதுமானது.
யாரெல்லாம் முத்ரா கடன் பெற தகுதியானவர்கள்?: 18 வயதை நிரம்பிய யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. விவசாயம் அல்லாத பிற தொழில் செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக கோழி வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களும் முத்ரா கடன் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications