சமீபத்தில் ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சேர்ந்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் சில வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆபரேட்டரை BSNL-க்கு மாற்றிக் கொண்டனர். தற்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் BSNL 4ஜி சிம் கார்டரை ஆர்டர் செய்து தங்களின் வீட்டில் பெற முடியும். அதாவது BSNL நேரடியாக உங்கள் வீட்டுக்கே சிம் கார்டை டெலிவரி செய்யும்.
BSNL 4ஜி சிம் கார்டு ஹோம் டெலிவரி: BSNL-இன் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் இனி கடைக்குச் செல்லவோ, நீண்ட வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை. 4ஜி சிம்மை எளிதாக ஆர்டர் செய்யக்கூடிய ஆன்லைன் வசதியை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் பயனாளிகளுக்கு வெறும் 10 நிமிடங்களில் அவர்களின் வீட்டிற்கு சிம் கார்டு டெலிவரி செய்யப்படும். இதை உறுதிப்படுத்தும் விதமாக, BSNL புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு செயல்முறையை ஒழுங்குபடுத்தும் தளமான ப்ரூனுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

BSNL 4ஜி சிம் கார்டை ஆன்லைனில் ஆர்டர் செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் ப்ரூன் இணையதளத்திற்குச் செல்லலாம்.
ஸ்டெப் 2: இணையதளத்தில், சிம் கார்டை வாங்க "Buy Sim Card" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: "BSNL" நெட்வொர்க் ஆபரேட்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: கிடைக்கக்கூடிய FRC திட்டங்களில் இருந்து உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், இமெயில் விவரங்கள், மற்றும் சிம் கார்டை டெலிவரி செய்வதற்கான உங்களுடைய முகவரி ஆகிய விபரங்களை வழங்கவும். அதன் பிறகு சிம் கார்டு உங்களுடைய வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
சில தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்த போதும், BSNL-யிடமிருந்து எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்போது பலரும் தங்களுடைய ஆப்பரேட்டரை மாற்றிக் கொண்டனர். அக்டோபர் 2024-க்குள் 80,000 டவர்களை நிறுவி, மார்ச் 2025-க்குள் கூடுதலாக 21,000 டவர்களை நிறுவுவதன் மூலம் BSNL அதன் நெட்வொர்க் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?



Click it and Unblock the Notifications