கிரெடிட் ஸ்கோர் கம்மியா இருக்கா.. அட நீங்களும் பர்சனல் லோன் வாங்கலாம்..எப்படின்னு பாருங்க!

சென்னை: குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் தனிநபர் கடனைப் பெற முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. தனிநபர் கடனுக்காக நீங்கள் கடன் வழங்கும் வங்கிகளையோ அல்லது நிதி நிறுவனங்களையோ அணுகும்போது, ​​அவர் செய்யும் முதல் விஷயம் கிரெடிட் ஸ்கோரை மதிப்பீடு செய்வதுதான். பொதுவாக CIBIL ஸ்கோர் என குறிப்பிடப்படும் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் கடனளிப்பவர் திருப்தி அடைந்தவுடன், தனிநபர் கடனுக்கான வேறு பல விஷயங்களையும் மதிப்பிடுகின்றனர். அவை என்ன என்பதைப் பார்ப்போம்.

CIBIL என்றால் என்ன?
CIBIL இன் முழு விரிவாக்கம் Credit Information Bureau என்பாதாகும். 2016 இல், TransUnion CIBIL ஐ கையகப்படுத்தியது, ஆனால், TransUnion CIBIL, இன்னும் CIBIL என்னும் பெயரிலேயே பிரபலமாக உள்ளது. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு கிரெடிட் தகவல் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இவை TransUnion CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark.

கிரெடிட் ஸ்கோர் கம்மியா இருக்கா.. அட நீங்களும் பர்சனல் லோன் வாங்கலாம்..எப்படின்னு பாருங்க!

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?: சிபில் ஸ்கோர் என்பது மூன்று எழுத்து கொண்ட எண் ஆகும். மேலும், இது 300க்கும் 900க்கும் இடைப்பட்ட எண்ணாகும். இது உங்கள் கடன் வரலாற்றைப் பிரதிபலிக்கும் நம்பர் எனலாம். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலும், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதிலும், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்தீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் கிரெடிட் ஸ்கோர் அமைகிறது. எனவே, கடன் வழங்குபவர்கள் பார்க்க விரும்புவது உங்களுடைய நல்ல கிரெடிட் ஸ்கோரை தான். கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால், நீங்கள் உங்கள் கடனை சரிவர கட்டி இருக்கீறிர்கள் என்று அர்த்தம்.

700 க்கு குறைவான சிபில் ஸ்கோர், உங்களுக்கு கடன் வழங்குபவரை சற்று சிந்திக்க வைக்கலாம். 750 க்கு மேல் சிபில் ஸ்கோர் இருந்தால் நீங்கள் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 600 முதல் 650 வரை உங்கள் சிபில் ஸ்கோர் இருந்தால் நீங்கள் லோன் பெறுவதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக இருக்கும். மேலும், 600 க்கு கீழிருந்தால் இன்னும் சற்று கடினம் தான். எனவே உங்களுடைய கடனைத் திருப்பி செலுத்துவதில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்.

உங்களிடம் குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தாலும் தனிநபர் கடனைப் பெற சில டிப்ஸ்

இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பிக்கவும்: உங்கள் குறைந்த கிரெடிட் ஸ்கோரைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், பணம் சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர் போன்ற ஒரு இணை விண்ணப்பதாரருடன் கடனுக்கு விண்ணப்பிக்கவும். இது கடனுக்கான அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

நிலையான வேலையைப் பெறுங்கள்: கடன் வழங்குபவர்கள் நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்களில் நிலையான வேலைகளுடன் கடன் வாங்குபவர்களை விரும்புகிறார்கள். இது உங்கள் வருமானத்தைப் பற்றி அவர்களுக்கு உறுதியளிக்கிறது. இதனால் உங்கள் கடன் வழங்க வங்கிகள் முன் வருகின்றன.

கூடுதல் ஆவணங்களைத் தயாரிக்கவும்: குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் இருக்கும் போது, நீங்கள் கடன் வழங்குபவருக்கு கூடுதல் ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும். உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்த தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

வங்கி அல்லாத கடன் வழங்குபவர்களிடம் விண்ணப்பிக்கலாம்: வங்கிகள் உங்களை குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பதால் நிராகரித்தால், வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனங்களில் முயற்சிக்கவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+