சில வெற்றிகரமான தொழிலதிபர்கள் வாழ்க்கையை பார்த்தால் அவர்கள் வர்த்தக துறையில் நுழைந்ததே எதிர்பாராத நிகழ்வாக இருந்திருக்கும். அப்படி எதிர்பாராத விதமாக தொழில் துறைக்கு நுழைந்து இன்று பெரிய பெண் தொழிலதிபராக உயர்ந்துள்ளவர் கஜல் அலக்.
ஹூருன் இந்தியா வெளியிட்டுள்ள மில்லினியா 2023ன் இந்தியாவின் சிறந்த கடின உழைப்பால் முன்னேறிய சிறந்த 200 தொழில்முனைவோர் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் நைகாவின் பல்குனி நாயர் முதலிடம் பிடித்துள்ளார்.

அதேசமயம் இளம் பெண் தொழில்முனைவோராக மாமார்த்தின் இணை நிறுவனர் கஜல் அலக்கும், வின்சோவின் இணை நிறுவனர் சவுமையா சிங் ரத்தோர் பெருமைப்படுத்தப்பட்டனர். இவர்களது வயது 35 என்பது குறிப்பிடத்தக்கது. கஜல் அலக்கின் வாழ்க்கையை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
ஹரியானா மாநிலம் குர்கானில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் கஜல் அலக். இவர் அங்கு அடிப்படை பள்ளி கல்வியை பெற்றார். பள்ளி படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள நியூயார்க் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸில் தொழில்நுட்பம் மற்றும் நவீன கலை, வடிவமைப்பு மற்றும் அப்ளையடு ஆர்ட்ஸ் படிப்புகளை படித்தார்.
தனது பட்டப்படிப்பை முடிந்த பிறகு, NIIT நிறுவனத்தின் கார்ப்பரேட் பயிற்சியளராக தனது கேரியரை தொடங்கினார். 2011ல் தனது காதலர் வருண் அலக்கை கரம் பிடித்தார். இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் முதலில் பிறந்தவர் அகஸ்தியர். இவர்தான் பிரபலமான மாமார்த் பிராண்ட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்.
அகஸ்தியர் பிறக்கும்போதே தோல் அலர்ஜி சார்ந்த நோயுடன் பிறந்தார். சில தயாரிப்பு ரசாயனங்கள் தங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதை உணர்ந்தனர். அவர்கள் தங்களது குழந்தைக்கு நச்சு இல்லாத பொருட்களை பயன்படுத்த விரும்பினர்.
வெளிநாட்டில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தங்கள் குழந்தைக்கு சிறந்த பொருட்களை கொண்டு வருமாறு கேட்டு சலிப்படைந்தனர். ஆனால் நச்சு இல்லாத பொருட்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதனையடுத்து தங்கள் குழந்தைக்கு நச்சு இல்லாத பொருட்களை அவர்களே தயாரிக்க முடிவு செய்தனர். இதன் விளைவாக 2016ல் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி மாமார்த் என்ற பிராண்ட் பெயரில் நச்சு இல்லாத குழந்தை பாராமரிப்பு பொருட்களை தயாரித்தனர்.
தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் உகந்த தனிப்பட்ட சுகாதார பொருட்களை உருவாக்குவதை கஜல் அலக் நோக்கமாக கொண்டிருந்தார். இயற்கை மூலக்கூறுகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங்க்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.
இதனையடுத்து தி டெர்மோ கோ, அக்வாலாஜிகா, ஆயுகா, பிபிலண்ட் மற்றும் டாக்டர் ஷெத்ஸ் ஆகிய 5 பிராண்டுகளை அலக் தம்பதியினர் உருவாக்கினர். இன்று அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. 2022 ஜனவரியில் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவனம் யூனிகார்ன் கிளப்பில் இடம் பிடித்தது.
அண்மையில் ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. ஐ.பி.ஓ. வெற்றியடைந்ததையடுத்து அந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ஹொனாசா கன்ஸ்யூமர் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.36 சதவீதம் குறைந்து ரூ.399.65ஆக இருந்தது. கஜல் அலக்கின் கடின உழைப்பு காரணமாக ரூ.25 லட்சம் மதிப்பிலான நிறுவனம் இன்று ரூ.12,858 கோடி நிறுவனமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications