இந்தியாவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஷாப்பிங் மால்கள் தற்போது மோசமான நிலைக்குச் சென்று வருவதாகச் சந்தை நிலவரம் கூறுகிறது. நாட்டின் ரீடைல் சந்தையின் முக்கிய பங்கு வகிக்கும் மால்கள் தற்போது கோஸ்ட் மால்களாக மாறி வருகிறது.
முதலில் கோஸ்ட் மால் என்பதன் விளக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும், கோஸ்ட் மால் என்பது ஆட்கள் இல்லாமல், மக்கள் ஷாப்பிங் செய்ய வராமல் இருக்கும் மால்கள் தான் கோஸ்ட் மால்கள் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இப்படியும் இருக்கா என பலரும் ஆச்சரியப்படும் வகையில் இருந்தாலும் இதுதான் இன்றைய நிலைமை.

இந்திய மக்களின் ஷாப்பிங் விருப்பம் பெரிய அளவில் மாறியுள்ள காரணத்தாலும், மக்கள் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் காரணத்தாலும், மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை பெரிய பெரிய அல்லது பிரபலமான ஷாப்பிங் மால்களுக்கு செல்ல மக்கள் விரும்புகின்றனர்.
இதனால் நாட்டின் பல ஷாப்பிங் மால்கள் தற்போது கோஸ்ட் ஷாப்பிங் மால்களாக மாறியுள்ளது. அதாவது மால்களில் காலியாக இருக்கும் கடைகள் அல்லது விற்பனை பகுதி 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கோஸ்ட் மால் என அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 57 கோஸ்ட் மால்கள் இருந்த நிலையில், 2023 முடிவில் இதன் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங் இந்தியா வெளியிட்டுள்ள 'Think India Think Retail 2024' என்ற அறிக்கையின்படி, 40 சதவீதத்திற்கும் அதிகமான கடை வாடகை இல்லாத ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் இதன் எண்ணிக்கை 57ல் இருந்து 64 ஆக உயர்ந்துள்ளது என அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதன்மை சந்தைகளில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களில் மொத்த குத்தகை பரப்பு (Gross Leasable Area - GLA) முந்தைய ஆண்டை விட 238% அதிகரித்துள்ளது. இதேவேளையில் கோஸ்ட் மால்களின் எண்ணிக்கை 57ல் இருந்து 64 ஆக உயர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுமார் 13.3 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட 64 ஷாப்பிங் மால்கள் கோஸ்ட் ஷாப்பிங் மையங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 58% அதிகமாகும்.
இந்தியாவில் அதிகப்படியான கோஸ்ட் மால்கள் இருக்கும் பகுதி டெல்லி NCR, அதை தொடர்ந்து மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications