இந்தியாவில் கிக் ஊழியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தாலும், இவர்களுக்கான பாதுகாப்பு முறையாக கிடைக்காத காரணத்தாலும் கர்நாடக அரசு தனது மாநிலத்தில் இருக்கும் அனைத்து கிக் ஊழியர்களுக்கும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பை அளிக்கிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், அம்மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் மீது மாநில அரசு விதிக்கும் கலால் வரி 20% உயர்த்தப்பட்டுள்ளது, இதேரோல் பீர் மீதான கலால் வரி 175 சதவீதத்தில் இருந்து 185 சதவீதம் உயர்த்தியதால் அம்மாநில குடிமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் கர்நாடாகா தான் அனைத்து முன்னணி டிஜிட்டல் சேவை மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குக்கும் முக்கிய வர்த்தக சந்தையாக உள்ளது. இதனாலேயே டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் என பல பிரிவுகளில் gig workers உள்ளனர்.
இந்த நிலையில் சோமேட்டோ, ஸ்விக்கி, அமேசான் போன்ற டிஜிட்டல் சேவை மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் gig workers-ன் பாதுகாப்பிற்காக கர்நாடக அரசு 4 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் கொடுக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கலின் போது தெரிவித்தார்.
இந்த 4 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பாதுகாப்பில் 2 லட்சம் ரூபாயை லைப் இன்சூரன்ஸ் ஆகவும், 2 லட்சம் ரூபாயை விபத்து காப்பீடாகவும் அளிக்க உள்ளதாக இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த 14வது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ள 5 முக்கிய அறிவிப்புகளை செயல்படுத்த வருடம் 52000 கோடி ரூபாய் செலவாக உள்ளது. இதன் மூலம் சுமார் 1.3 கோடி குடும்பங்கள் நன்மை அடையும் எனவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
பெண்களுக்கான இலவச பஸ் வசதி, 200 யூனிட் இலவச மின்சாரம், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு 10 கிலோ அரிசி, குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய், வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு 3000 ரூபாய் அளிப்பது தான் கர்நாடக பொது தேர்தலின் போது காங்கிரஸ் கொடுத்த 5 முக்கிய வாக்குறுதி.


Click it and Unblock the Notifications