சில நேரங்களில் ஒரு சிறு விஷயமும் ஒரு சிலரின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்து விடும். அதுதான் கிரிஜா பாட்டியின் வாழ்க்கையிலும் நடந்தது. 74 வயதான கிரிஜா பாட்டி பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் ஸ்னாக்ஸ் ஐட்டங்களை ருசியுடன் தயாரிக்கக்கூடிய ஒருவர். இவருடைய சமையல் ஆர்வத்திற்கே இவருக்கு பிரத்தியேக பேன் பேஸ் இருந்துள்ளது.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டில் முதன்முதலாக கிரிஜா பாட்டிக்கு ஒரு திருமண ஆர்டர் கிடைத்தது. அதற்காக ரூ.1 லட்சம் முன் பணமும் வந்துள்ளது. இந்த பணம் கிரிஜா பாட்டியின் வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்தது. ஒரு முறை திருமணத்திற்காக செய்த ஆர்டர் இன்று சென்னை முழுவதும் "கிரிஜா பாட்டி ஹோம் ஃபுட்ஸ்" என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது. முறுக்கு, மிக்சர், பொடி வகைகள், ஊறுகாய் போன்ற பாரம்பரிய இனிப்பு மற்றும் காரங்களை விற்பனை செய்து ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனமாக கிரிஜா பாட்டி ஹோம் ஃபுட்ஸ் வளர்ந்துள்ளது.

கிரிஜா பாட்டி தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் தான் இந்த தொழிலைத் தொடங்கினார். கோவிட் காலத்தில் அவர் தனது தொழிலை ஆன்லைனை மூலம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். அப்போதுதான் அவருக்கு ஆர்டர்கள் அதிகரிக்க தொடங்கியது. எனவே வீட்டிலேயே ஸ்நாக்ஸ் ஐட்டங்களை தயார் செய்து பேக் செய்து விற்பனை செய்வதற்காக அருகில் உள்ள 1,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்தார்.
"தான் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்ததாகவும், கூட்டு குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 50 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்டவர்களை கவனித்து அவர்களுக்கு உணவளித்து வந்ததாகவும் கிரிஜா பாட்டி கூறியுள்ளார்". இதனால் அவருக்கு சமையல் செய்வதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு தனி உரிமையாளராக தொடங்கிய கிரிஜா பாட்டியின் நிறுவனம், 2021-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தனியார் நிறுவனமாக மாறியது.
சென்னையின் வில்லிவாக்கம் பகுதியில் 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு குடும்பத்தில் வளர்ந்த கிரிஜா பாட்டி, வீட்டு விவகாரங்களை நிர்வகிப்பதிலும் திறமையானவர் என்று கூறப்படுகிறது.
குழந்தை பருவத்தில் கிரிஜா பாட்டிக்கு பெரிதாக சமையல் ஒன்றும் தெரியாதாம், அம்மா அத்தைகள் தினமும் சமைப்பதை மட்டும் பார்த்து வளர்ந்துள்ளார். சிறுவயதில் தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடைய குழந்தைகளை கவனிப்பதுதான் கிரிஜா பாட்டியின் முக்கிய பொறுப்பாக இருந்துள்ளது. அதன் பிறகு 18 வயதில் கிரிஜா பாட்டிக்கு திருமணமானது.
தன் தாய் வீட்டில் காய்கறிகள் வெட்டுவது மற்றும் கழுவுவது போன்ற சிறு உதவிகளை மட்டுமே செய்து வந்ததால் அந்த சமயத்தில் அவருக்கு எந்த சமையலும் செய்ய தெரியாமல் இருந்துள்ளது. ஒரு முறை கிரிஜா பட்டியின் மாமியார் அப்பளம் பொறிக்க கூறியுள்ளார். அப்போது கிரிஜா பாட்டி தெரியாமல் சூடான எண்ணெயை கீழே கொட்டியுள்ளார். அதிலிருந்து தான் சமையலை கற்றுக்கொள்ள வேண்டும். சமையலின் அனைத்து அம்சங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி உள்ளார். அம்மா மற்றும் மாமியாரிடம் இருந்து சேகரித்த சமையல் குறிப்புகளை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக சமைக்க தொடங்கியுள்ளார்.
அப்படி தொடங்கப்பட்ட சமையல் தான் இன்று கிரிஜா பாட்டி ஹோம் ஃபுட்ஸ் என்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 வகையான தரமான ஸ்னாக்ஸ் ஐட்டங்களை தயார் செய்கிறார். சில பண்டிகைகளுக்கென்று பிரத்தியேகமாக சில இனிப்பு வகைகள் செய்வது வழக்கம். அது போன்ற பொருட்களும் கிரிஜா பாட்டி ஹோம் ஃபுட்ஸ் நிறுவனத்தில் கிடைக்கிறது. கூடுதலாக திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கான ஆர்டர்களையும் பெற்று தயார் செய்து தருகிறார்.
இங்கு தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் நியாயமான விலையில் கிடைக்கிறது. 200 முதல் 400 கிராம் கொண்ட பாக்கெட் ரூ. 350 என்ற விலையில் விற்கப்படுகிறது இதனால் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு உள்ளனர். இந்நிறுவனத்தில் புளி மிளகாய் ஊறுகாய், கார தட்டை, வெண்ணெய் மாலட்டு, கிளாசிக் மிச்சர், பாதுஷா, பூண்டு கருவேப்பிலை பொடி, மாங்காய் தொக்கு, இட்லி மிளகாய் பொடி போன்ற பல்வேறு தயாரிப்புகள் உள்ளன.
ஊறுகாய், பொடி வகைகள், இனிப்புகள் மற்றும் கார வகைகளுக்கு அதிக தேவை இருப்பதை பார்த்த பிறகு தானும் இந்தத் தொழிலைத் தொடங்க ஆர்வமாக இருந்துள்ளார் கிரிஜா பாட்டி. அதன் பிறகு திறமை இருந்தும் வேலை செய்ய முடியாமல் இருக்கும் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் எண்ணியுள்ளார்.
கோவிட் காலத்தில் கணவர்கள் வேலை இழந்து வீட்டில் இருந்தபோது ஏழைப் பெண்களுக்கு கிரிஜா பாட்டி வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். உணவுப் பொருட்களை தயாரிப்பதில் அவருக்கு உதவ 30 முதல் 60 வயதுக்குட்பட்ட 20 பெண்களை பணியமர்த்தியுள்ளார். அதில் புவனா என்ற ஒரு பெண்மணியும் உள்ளார். இவர் கிரிஜா பாட்டி இந்த தொழிலை தொடங்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து பாட்டியுடன் பயணித்து வருகிறார்.
வீட்டில் தயாரிக்கப்படும் உணவுதான் ஆரோக்கியமானது என்பதை உணர்ந்து இன்றைய இளைய தலைமுறை நேரமின்மையின் காரணமாக வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கிரிஜா பாட்டி இந்த தொழிலை கையில் எடுத்துள்ளார்.
சமைப்பது விற்பனை செய்வதற்கு அப்பால் கிரிஜா பாட்டி கார்டனிங் செய்யவும் விருப்பமுடையவர். இவர் பலாப்பழம் உட்பட பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வருகிறார். ஆன்லைன் வியாபாரம் சமையல் என அனைத்தையும் செய்து விட்டு நண்பர்களை சந்திக்கவும் நேரம் ஒதுக்குகிறார்.
உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல்.. கிரிஜா பாட்டி தனது தயாரிப்புகள் குறித்த படிப்படியான வழிமுறைகளுடன் வீடியோ மற்றும் பிளாக்களையும் பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பிரபல தளங்களிலும் அக்கவுண்ட் உள்ளது.
கிரிஜா பாட்டியின் கதை கனவுகளுக்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. இன்றைய இளைய தலைமுறை ஒரு சிறு வேலை செய்தாலே கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் வயது முதிர்வு இருந்தும் தன்னால் முடியும் என்ற உத்வேகத்தோடு செயல்படும் இவர் பல தொழில் முனைவோருக்கு சிறந்த உதாரணம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications