Gleeden: திருமணத்திற்குப் பின் டேட்டிங்.. அலைமோதும் இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேட்டிங் கலாச்சாரம் நாளுக்கு நாள் அனைத்து மட்டத்திலும் அதிகரித்து வரும் நிலையில் திருமணத்திற்குப் பின்பு கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவோருக்காகவே பிரத்தியேகமாக Gleeden என்னும் செயலி பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டு உலகில் பல நாடுகளில் இயங்கி வருகிறது.

இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் Gleeden செயலியில் இருக்கும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களில் இந்தியாவில் மட்டுமே 20 சதவீதம் உள்ளனர் என்றால் மிகையில்லை.

இந்திய மக்கள் மத்தியில் டேட்டிங் கலாச்சாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இதைப் பார்த்தாலே தெரிகிறது.

டேட்டிங் போறது எல்லாம் வேஸ்ட் பாஸ்.. இளம் ஜோடி செய்த வேலையை பார்த்தீங்களா..?டேட்டிங் போறது எல்லாம் வேஸ்ட் பாஸ்.. இளம் ஜோடி செய்த வேலையை பார்த்தீங்களா..?

 டேட்டிங் செயலி

டேட்டிங் செயலி

இந்தியாவில் இருக்கும் பிற டேட்டிங் செயலி போலத் தான் இதுவும், ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் திருமணத்திற்குப் பின்பு டேட்டிங் செய்ய விரும்புவோருக்கான பிரத்தியேக டேட்டிங் சேவை செயலி தான் இந்த Gleeden.

இந்தியா

இந்தியா

எது சரி, எது தவறு என்பதெல்லாம் அவரவர் முடிவு. எனவே இந்தியாவில் இந்தச் செயலியின் பயன்பாடு, ஆதிக்கத்தை மட்டுமே இங்குப் பார்ப்போம். Gleeden செயலி உலக நாடுகளில் இருந்து மொத்தம் 10 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதாவது 1 கோடி வாடிக்கையாளர்கள்.

20 லட்சம் பேர்

20 லட்சம் பேர்

இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 2 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது Gleeden செயலி. பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட டேட்டிங் செயலி உலகளவில் அதன் இந்திய வர்த்தகத்தில் யூசர்ஸ் எண்ணிக்கை செப்டம்பர் 2022 முதல் 11 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

டேட்டிங் கலாச்சாரம்

டேட்டிங் கலாச்சாரம்

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து டேட்டிங் கலாச்சாரம் நாட்டின் மெட்ரோ நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களிலும் அதிகரித்துள்ளது. சிறிய நகரங்களில் இருக்கும் இளைஞர்கள் புதிய தோழமை, அன்பை தேடுதலுக்காக டிண்டர் மற்றும் பம்பிள் போன்ற டேட்டிங் தளங்களை அதிகளவில் நாட துவங்கியுள்ளனர்.

2, 3 தர நகரங்கள்

2, 3 தர நகரங்கள்

Gleeden வெளியிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகள் படி அதன் புதிய யூசர்களில் பெரும்பாலானவர்கள் கிட்டதட்ட 66 சதவீதம் பேர் நாட்டின் TIER 1 நகரங்களிலிருந்து வருகிறார்கள். மீதமுள்ள 44 சதவீத வாடிக்கையாளர்கள் 2 மற்றும் 3 ஆம் ஆண்டுக்கு நகரங்களிலிருந்து வருகிறார்கள்.

உயர் சமூக மக்கள்

உயர் சமூக மக்கள்


Gleeden செயலியில் உள்ள பெரும்பாலான இந்திய யூசர்கள் உயர் சமூக-பொருளாதாரச் சூழலில் (high socio-economic) இருந்து வந்தவர்கள் என்றும் இந்த டேட்டிங் செயலி நிறுவனம் கூறியது.

ப்ரொபஷனல் பிரிவு மக்கள்

ப்ரொபஷனல் பிரிவு மக்கள்

Gleeden செயலியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் பொறியாளர்கள், தொழில்முனைவோர், ஆலோசகர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் போன்ற ப்ரொபஷனல் பிரிவில் இருந்து வருபவர்கள். மேலும் அதிக எண்ணிக்கையிலான இல்லத்தரசிகள் உள்ளனர்.

monogamy கலாச்சாரம்

monogamy கலாச்சாரம்

Gleeden என்பது திருமணமானவர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு டேட்டிங் செயலியாகும், மேலும் இந்தத் தளத்தில் இந்தியர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பார்க்கும் போது இந்தியாவின் பாரம்பரியமாகப் பார்க்கப்படும் monogamy அதாவது ஒருதார திருமணம் எவ்வாறு மாறிவருகிறது என்பது தெரிகிறது.

வயது வரம்பு

வயது வரம்பு

Gleeden தளத்தில் இருக்கும் யூசர்களின் வயதைப் பொறுத்தவரை, ஆண்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு மேலும், பெண்கள் 26 வயதுக்கும் மேலும் உள்ளனர். Gleeden தளத்தில் பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக, Gleeden இந்திய மேனேஜர் சிபில் ஷிடெல் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gleeden: Extramarital Dating App used by more Indian professional

Gleeden: Extramarital Dating App used by more Indian professional
Story first published: Tuesday, January 17, 2023, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X