டெல்லி: மலேசிய மேபேங்கின் துணை நிறுவனமான மேபேங்க் கிம் எங் செக்யூரிட்டீஸ் நிறுவனம், டாடா மோட்டார்ஸின் பங்கு விலையில் பலத்த சரிவு ஏற்படலாம் என்று கணித்துள்ளது.
இது குறித்து அந்த செக்யூரிட்டீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டாடா மோட்டார்ஸின் பங்கு விலைகள் பலத்த சரிவினைக் காணலாம். ஏனெனில் ஜாகுவார் லேண்ட் ரோவர் குறித்த கவலைகள் இன்னும் நீடிக்கின்றன.
தரகு ஆய்வாளர்களான ஜிகர் ஷா மற்றும் விக்ரம் ராமலிங்கம், டாடா மோட்டார்ஸ் பல தலைவலிகளைக் கொண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
Array
மேலும் இந்த நிறுவனத்தின் அதிக கடன் குறித்த கவலையும் இருந்து வருகின்றது. அதோடு ஐரோப்பிய ஒன்றியத்தில் மின்சார வாகனங்களுக்கு மாற்றப்பட வேண்டிய அவசியம் உள்ளதால், அதன் பணப்புழக்களுக்கு அழுத்தம் ஏற்படும். அதோடு டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது அதன் மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து, 5 மடங்கு ஏற்றம் கண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை
மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸின் பங்கு விலையானது 63.60 ரூபாயாக இருந்தது. எனினும் நாட்டில் வலுவான மீட்சி இருந்ததால் இதன் விற்பனை அதிகரித்தது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இதன் பங்கு விலையானது 316.20 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. கடந்த வெள்ளிகிழமையன்று சுமார் 3.04% வீழ்ச்சி கண்டது.
டாடா மோட்டார்ஸின் காலாண்டு முடிவுகள்
இதற்கிடையில் தான் மேபேங்க் இந்த நிறுவனத்தின் 12 மாத இலக்காக 160 ரூபாயினை நிர்ணயித்துள்ளது. டிசம்பர் காலாண்டில் முந்தைய ஆண்டினை காட்டிலும் 67.2% லாபம் அதிகரித்துள்ளது. அதே இந்த நிறுவனத்தின் வருவாய் 5.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஜேஎல்ஆர் தேவை மீண்டு வருவதையடுத்து, சந்தை ஏற்றத்தினை கண்டது.
தேவை மீண்டு வர சிறிதுகாலம் ஆகலாம்
இங்கிலாந்தினை அடிப்படையாக கொண்ட இந்த சொகுசு கார் நிறுவனம், அதன் வரிக்கு முந்தைய லாபம் 439 மில்லியன் பவுண்டாக அதிகரித்தது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 121 மில்லியன் பவுண்டு அதிகரித்துள்ளது. எனினும் கொரோனாவால் ஜேஎல்ஆரின் தேவை குறையலாம் என்ற கவலைகள் இருந்து வருகிறது. இதற்கிடையில் இந்தியாவிலும் அதன் வர்த்தக வாகன தேவை மீண்டு வர சிறிது காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிபுணர்கள் இதன் இலக்கினை இப்படி நிர்ணயித்திருக்கலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications