இந்தியா முழுவதும் கடந்த 5 வருடத்தில் அதிகப்படியான வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகத்தை அமைத்துள்ளது. இந்தியாவில் நிறைந்திருக்கும் டெக் ஊழியர்கள் மற்றும் மேலாண்மை பட்டதாரிகளைப் பயன்படுத்திக்கொள்ள டெக்னாலஜி, இன்ஜினியரிங், கன்சல்டிங், ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், டேட்டா சென்டர் எனப் பல துறை சார்ந்த முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் தனது சொந்த அலுவலகத்தை நாட்டின் பெரு நகரங்களில் அமைத்து வருகிறது.
சென்னையில் மட்டும் தற்போது சுமார் 305 உலகளாவிய திறன் மையங்கள் (GCC) உள்ளன, 2019-2024 மத்தியிலான 5 வருட காலத்தை ஒப்பிடுகையில் சுமார் 70% அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ளத் தமிழ்நாடு அரசு ஜிசிசி-கழுகான சிறப்பு கொள்கைகளை வகுத்து செயல்பட்டால், நாட்டின் டாப் 3 ஜிசிசி ஹப்-களில் ஒன்றாகத் தமிழ்நாடு உயரும் எனக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் 2019-2024 ஆண்டு மத்தியில் GCC (உலகளாவிய திறன் மையம்) அலுவலகங்களின் வளர்ச்சி:
என்சிஆர் : 285+ டூ 465+ (63.16%)
மும்பை : 215+ டூ 365+ (69.77%)
புனே: 210+ டூ 360+ (71.43%)
ஹைதராபாத் : 230+ டூ 355+ (54.35%)
சென்னை : 180+ டூ 305+ (69.44%)
பெங்களூர் : 620+ டூ 875+ (41.13%)
மற்ற நகரங்கள் : 90+ டூ 220+ (144.44%)
குறிப்பிடத்தக்க வளர்ச்சி: இந்தியாவில் உள்ள உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கை 2019 ஆம் நிதியாண்டில் 1,200+ இலிருந்து 2024 ஆம் நிதியாண்டில் 1,700+ ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் GCC நிறுவனங்களின் அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை 2,200+ இலிருந்து 2,975+ ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் ஜிசிசி அலுவலகங்களில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 19 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இது இந்திய ஐடி சேவைத் துறையை ஒப்பிடும் போது குறைவு என்றாலும், இந்த எண்ணிக்கை வேகமாக உயர உள்ளது.
இந்தியாவிலேயே பெங்களூர் தான் GCC அலுவலகங்களை அமைக்க விருப்பமான இடமாகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. பெங்களூரை தொடர்ந்து NCR, ஹைதராபாத் மற்றும் புனே ஆகியவை உள்ளன. நகரங்கள் வாரியாக பார்க்கப்படும் போது சென்னை 70 சதவீத வளர்ச்சி உடன் 5வது இடத்தில் உள்ளது.
நகரங்கள் வாயிலாகத் தகவல்கள்:
பெங்களூரு: 2019 நிதியாண்டில் 620+ GCC-களுடன் அசைக்க முடியாத இடத்தில் இருந்து 2024 நிதியாண்டில் 875+ ஆக வளர்ந்துள்ளது.
NCR: டெல்லிக்கு அருகில் இருக்கும் என்சிஆர் பகுதியில் நிலையான வளர்ச்சியைக் கண்டு, 2019 நிதியாண்டில் 285+ GCC அலுவலகங்களைக் கொண்டு 2024 நிதியாண்டில் 465+ ஆக அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்: வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தில் 2019 நிதியாண்டில் 230+ GCC களிலிருந்து 2024 நிதியாண்டில் 355+ ஆக குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது.
புனே: தொழில்நுட்ப துறையில் மற்றொரு முக்கிய நகரமான புனே, 2019 நிதியாண்டில் 210+ GCC களிலிருந்து 2024 நிதியாண்டில் 360+ ஆக வளர்ந்துள்ளது.
மும்பை: மும்பை வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றாலும், 2019 நிதியாண்டில் 215+ GCC-களுடன் மற்றும் 2024 நிதியாண்டில் 365+ ஆக இன்னும் மற்ற முக்கிய நகரங்களுக்குப் பின் தங்கியுள்ளது.
சென்னை: சென்னை, 2019 நிதியாண்டில் 180+ GCC களிலிருந்து 2024 நிதியாண்டில் 305+ ஆக நிலையான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
மற்ற பிராந்தியங்கள்: பெங்களூரு, NCR, ஹைதராபாத், புனே, மும்பை மற்றும் சென்னை ஆகியவை GCC களின் பெரும்பகுதியைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் மற்ற பிராந்தியங்களும் மெல்ல மெல்ல ஜிசிசி அலுவலகங்களைக் கவர்ந்து வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications