சர்வதேச நிறுவனங்களின் டாப் சிஇஓ-க்கள் ரெசசன் லேசானதாகவும். குறுகியதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இது குறித்து KPMG 2022 CEO Outlook-ன் ஃஅறிக்கையின் படி, அடுத்த 12 மாதங்களில் ரெசசன் வரலாம் என 86% தலைமை செயல் அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆனால் 58% பேர் லேசனாகதாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்.
ரெச்சனுக்கு வாய்ப்பு அதிகம்
கடந்த சில மாதங்களாகவே மந்த நிலை குறித்த அச்சம் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்து பல்வேறு மத்திய வங்கிகளும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது ரெசசனுக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பெருந்தொற்றுகள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனையும் மேற்கொண்டு பணவீக்க்கத்தினை தூண்டியுள்ளது.
அடுத்த 12 மாதங்களில் ரெசசன்
10ல் 9 தலைமை செயல் அதிகாரிகள் (86% பேர்) அடுத்த 12 மாதங்களில் ரெசசன் வரலாம் என எதிர்பார்க்கின்றனர். இதே 5ல் 3 பேர் (58% பேர்)லேசானதாகவும், குறுகியதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.
கொரோனாவுக்கு பின்னர் தொற்று நோய்க்கு பிந்தைய மீட்சியை கடினமாக்கும் என பெரும்பாலான உயர் நிர்வாகிகள் கருதுகின்றனர்.
வருவாய் பாதிக்கும்
ஆய்வின் படி 73% தலைமை நிர்வாக அதிகாரிகள் மந்த நிலை அடுத்த 3 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். எனினும் 75% பேர் மந்த நிலைக்கு பிந்தைய வளர்ச்சியினை கடினமாக்கும் என நம்புகின்றனர்.
71% தலைமை அதிகாரிகள் மந்த நிலை அடுத்த 12 மாதங்களில் நிறுவனங்களின் வருவாயில் 10% வரையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம் என கணித்துள்ளனர்.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனருமான டிவி நரேந்திரன், தொற்று நோய் மற்றும் ஐரோப்பாவின் நிலைகள் ஒன்றொன்று இணைந்துள்ளன. என்னை பொறுத்தவரையில் புவிசார் அரசியல் என்பது ஒரு முதன்மையான சிக்கல். ஆக நாம் அனைவரும் சரியானதொரு சப்ளை சங்கிலியினை உருவாக்க வேண்டும்.
கிறிஸ்டாலினா ஜார்ஜீவா
இந்த வாரத்தின் தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனை, கால நிலை மாற்றம் என அனைத்தும் உலக பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. பொருளாதாரம் இருண்டு விட்டது என கூறியுள்ளார்.
வளர்ச்சி கணிப்பு
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மந்த மடைந்து வருவதாகவும், வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்றுமதிக்கான தேவை குறைந்து வருவதாகவும் ஜார்ஜீவா கூறியுள்ளார். ஐஎம்எப் 2023ம் ஆண்டில் உலகின் வளர்ச்சி விகிதத்தினை 2.9%-ல் இருந்து அடுத்த ஆண்டில் குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
வட்டி அதிகரிக்கலாம்
மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை அதிகரிப்பதால், வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் நிதி நெருக்கடி ஏற்படலாம். மேற்கொண்டு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு மந்த நிலையை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கி குழுமம்
இதே உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் சமீபத்தில் சர்வதேச வளர்ச்சி விக்க்தம் மெதுவாக உள்ளதாகவும், இது இன்னும் குறையலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் பல நாடுகள் ரெசசனுக்கும் நுழையலாம் என கூறியிருந்தார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications