உலக நாடுகளில் ரெசிஷன் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா எப்படியாவது இதிலிருந்து தப்பிக்க வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், ஐரோப்பாவில் பல நாடுகள் ஏற்கனவே ரெசிஷனுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும், பிற ஜி20 நாடுகளைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டு உள்ளது என ஐஎம்எப் உட்படப் பல அமைப்புகள் கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் சர்வதேச பொருளாதார மந்தநிலையில் தாக்கத்தின் முதல் அடி விழுந்துள்ளது.
பொருளாதார மந்த நிலை
உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அக்டோபர் மாதம் நாட்டின் ஏற்றுமதி அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 16.65 சதவீதம் குறைந்துள்ளது.
ஏற்றுமதி
இதேபோல் பிப்ரவரி 2021க்கு பின்பு முதல் முறையாக நாட்டின் ஏற்றுமதி சரிந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி 16.65 சதவீதம் சரிந்தது மூலம் கடந்த 20 மாதத்தில் முதல் முறையாக 30 பில்லியன் டாலருக்குக் கீழ் சரிந்துள்ளது முக்கியமான விஷயமாக உள்ளது.
இறக்குமதி
இதே அக்டோபர் மாதம் நாட்டின் இறக்குமதி அளவு, கடந்த ஆண்டை காட்டிலும் 5.7 சதவீதம் அதிகரித்து 56.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இறக்குமதி அளவுகளைப் பார்க்கும் போது கடந்த 8 மாதத்தில் நாட்டின் இறக்குமதி அதிகளவில் சரிந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் உள்நாட்டு தயாரிப்புகளின் விலை பெரிய அளவில் குறைந்தது தான்.
வர்த்தகப் பற்றாக்குறை அளவு
இதன் மூலம் அக்டோபர் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 50.25 சதவீதம் அதிகரித்து 26.91 பில்லியன் டாலராக உள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
25 பில்லியன் டாலர் அளவீடு
மேலும் கடந்த 4 மாதங்களாக நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்குமான வித்தியாசம் 25 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 17.91 பில்லியன் டாலராக இருந்தது, 2022 அக்டோபர் மாதம் இதன் அளவு 26.91 பில்லியன் டாலராக உள்ளது.
முக்கியத் துறைகள்
இந்தியாவின் ஏற்றுமதி அளவு பல துறைகளில் பாதிக்கப்பட்டு உள்ளது, சில துறையில் மட்டுமே உயர்வடைந்துள்ளது. இதில் முக்கியமாக நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி இந்த அக்டோபர் மாதத்தில் 38 சதவீதம் அதிகரித்து 1.8 பில்லியன் டாலராக உள்ளது.
இன்ஜினியரிங் பொருட்கள்
மேலும் இன்ஜினியரிங் பொருட்கள் எப்போதும் இல்லாமல் 21 சதவீதம் சரிந்து வெறும் 7.4 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டீல் மற்றும் இதர பொருட்கள் இந்திய ஏற்றுமதியில் பாதிக்கப்பட்டு உள்ளது.
டெக்ஸ்டைல் மற்றும் ஜுவல்லர்ஸ்
ஏற்றுமதி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரெடிமேட் கார்மென்ட்ஸ் மற்றும் நகை தயாரிப்பு துறையின் ஏற்றுமதி 21 சதவீதம் சரிந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் பருத்தி, ஹேண்ட்லூம், கைவினை பொருட்களின் விலை கடந்த வருடத்தைக் காட்டிலும் பாதியாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications