உலக நாடுகள் ரெசிஷனுக்குச் சென்றுகொண்டு இருக்கும் வேளையில் ரெயூட்டர்ஸ் கணிப்பு மூலம் இந்த ரெசிஷன் காலத்தில் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவில் பாதிக்காது எனத் தெரிய வந்த நிலையில், இன்று இந்தியாவின் பொருளாதார நிலை தெரிய வந்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம், வர்த்தகம், நுகர்வு சந்தை, நிதிப் பற்றாக்குறை, ஆர்பிஐ முடிவுகள் எனப் பலவற்றின் நிலையைக் கணித்துள்ளது.
இதில் சாமானிய மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வரும் வேளையில் அதிகப் பணவீக்கம், நாணய கொள்கை இறுக்கம், வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல முக்கியமான பாதிப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளதாகவே தெரிகிறது.
சர்வதேச நாணய நிதியம்
சமீபத்தில், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2023 உலகளாவிய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2.7 சதவீதமாகக் குறைத்தது. இதோடு 2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய பொருளாதார உற்பத்தியில் சுமார் 4 டிரில்லியன் டாலர் அளவிலான இழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஐஎம்எப் கணித்தது மட்டும் அல்லாமல் எச்சரித்தும் உள்ளது.
CareEdge கணிப்பு
இந்த நிலையில் இந்தியா மற்றும் உலகளவிலான பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில், CareEdge பொருளாதார வல்லுநர்கள் முக்கியமான கணிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்தியப் பொருளாதாரம் 2023 ஆம் நிதியாண்டில் அதாவது மார்ச் 2023 உடன் முடிவடையும் நிதியாண்டில் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்று கணித்துள்ளனர்.
நிதிப் பற்றாக்குறை அளவு
இதேபோல் நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் 6.5 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
இது மட்டும் அல்லாமல் இந்தியாவின் பணவீக்கத்தைக் குறைத்து, பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வைக்க ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் மாதம் நடக்கும் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தைக் கட்டாயம் 25-35 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 - 0.35 சதவீதம் வரையில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை பணவீக்க அளவு
இதேவேளையில் ஐஎம்எப் அமைப்பு 2021 ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாக இருந்த சர்வதேச சில்லறை பணவீக்க அளவுகள் 2022 ஆம் ஆண்டில் 8.8 சதவீதமாக உயரும் எனக் கணித்துள்ளது. இதே சில்லறை பணவீக்கம் 2023 ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்து 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் கோவிட்-19 பாதிப்புக் காரணமாக ஏற்கனவே உயர்ந்த பணவீக்க அளவுகள் கூடுதலாக, ரஷ்யா-உக்ரைன் போர், விநியோக தடைகள், எரிபொருள் விலைகள் ஆகியவை பணவீக்கத்தை மேலும் மோசமாக்கியுள்ளது.
ரெயூட்டர்ஸ் கணிப்பு
ரெயூட்டர்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 22 உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கலந்துகொண்டது. இதில் வெறும் 6 மத்திய வங்கிகள் மட்டுமே அடுத்த ஆண்டின் இறுதிக்குள் தனது நிலையான பணவீக்க இலக்கை அடைவோம் எனத் தெரிவித்துள்ளது. ஜூலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 18 மத்திய வங்கிகள் இலக்கை அடைவோம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நுகர்வு சந்தை
இந்தியாவில் ஆட்டொமோபைல் விற்பனை, ஈவே பில், ஜிஎஸ்டி வசூல் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஒட்டுமொத்த நுகர்வு அளவுகளில் பெரும் பாதிப்பு உள்ளது. ஆகஸ்ட் மாதம் IIP அளவுகள் சரிவைச் சந்தித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications