உலகளாவிய உண்மையான ஜிடிபி விகிதம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 7.2% சரிந்துள்ளது.
இந்த ஜிடிபி விகிதமானது 1997 ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சியாகும்.

இந்த விகிதமானது மோதிலால் ஆஸ்வால் 39 நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவில் கணக்கிடப்பட்டுள்ளது. இது 19 ஐரோப்பிய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஆய்வாகும்.
இதில் உலகப் பொருளாதாரத்தில் 86%மும், முன்னேறிய பொருளாதாரங்களில் 94%மும், வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் 73% மும் அடங்கும்.
மேம்பட்ட பொருளாதாரங்களில் இந்த உண்மையான ஜிடிபியானது 11 சதவீத வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவைத் தவிர்த்து மற்ற நாடுகளில் 14 சதவீத வீழ்ச்சியினையும் கண்டுள்ளது. ஆனால் இதில் கவனிக்கதக்க ஒரே விஷயம் என்னவெனில் கணக்கிடப்பட்ட 39 நாடுகளில் சீனா மட்டும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே தைவான் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.2 சதவீதம் மட்டுமே கண்டுள்ளது. இதே இந்தியா கடந்த காலாண்டில் மிக மோசமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 24% வீழ்ச்சியினைக் கண்டது.
உலகளாவிய உண்மையான தனியார் நுகர்வு செலவானது கடந்த காலாண்டில் 11 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரம் உண்மையான மொத்த மூலதன உருவாக்கம் (GCF) 6 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் (GFCE) இறுதி நுகர்வு செலவு தேக்க நிலையிலேயே இருந்தது.
உலகளாவிய அளவில் கொரோனாவின் தாக்கம் பரவி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பல நாடுகளும் லாக்டவுனால் பூட்டப்பட்டது. இதற்கு மத்தியில் வளர்ச்சி விகிதம் சரிந்தது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் இந்த வீழ்ச்சி 39 நாடுகளிலும் இருந்தது. ஆனால் இது சீனாவில் -2.9% வீழ்ச்சியுடனும், சிங்கப்பூரில் -28% வீழ்ச்சியுடனும் இருந்தது. எனினும் மிகப்பெரிய நிதி தூண்டுதல் இருந்த போதிலும் GFCE எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. ரியல் GFCE கடந்த ஆண்டைவிட 0.6% சரிந்தது.
எனினும் இந்த ஜிடிபி விகிதமானது அடுத்து வரும் காலாண்டில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது மூன்றாவது காலாண்டில் நிச்சயம் கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications