வேலைய காப்பாத்திக்குங்க! "100% ரெசசன் வரலாம்" ஷாக் கொடுத்த ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் இத்தனை நாட்களாக, நாடுகளையும், மருத்துவர்களையும் நோயாளிகளையும் தான் பயமுறுத்திக் கொண்டு இருந்தது.

 

ஆனால் இப்போது நம்மைப் போன்ற சராசரி வெகு ஜன மக்களையும் பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

எப்படி பாதிக்கும் என்று கேட்கிறீர்களா..? ரெசசன். முதலில் ரெசசன் என்கிற வார்த்தையில் இருந்தே தொடங்குவோம்.

ரெசசன் என்றால் என்ன?

ரெசசன் என்றால் என்ன?

சுருக்கமாக பொருளாதார வளர்ச்சி மந்தமாகவோ அல்லது பொருளாதார வளர்ச்சியே இல்லாத காலம் தான் ரெசசன் காலம் என்கிறோம். பொதுவாக பொருளாதாரம் தொடர்ந்து 2 காலாண்டுகளுக்கு மேல் ஜிடிபி வளர்ச்சி சரிகிறது என்றாலே ரெசசன் என்பார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்திய ஜிடிபி

இந்திய ஜிடிபி

இந்தியாவில் கடந்த மார்ச் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 %, ஜூன் 2019 காலாண்டில் 5.6 %, செப்டம்பர் 2019 காலாண்டில் 5.1 %, டிசம்பர் 2019 காலாண்டில் 4.7% என தொடர்ந்து நான்கு காலாண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சரிந்து கொண்டே இருக்கிறது.

ரெசசன் வந்தால் என்ன ஆகும்
 

ரெசசன் வந்தால் என்ன ஆகும்

1. பொருளாதார நடவடிக்கைகள் குறையும்
2. எனவே வியாபாரம் குறையும்
3. வியாபாரம் குறைவதால், உற்பத்தி குறையும்
4. உற்பத்தி குறைப்பதால், செலவை குறைக்க ஆட்களை வேலையில் இருந்து நீக்குவார்கள்.
5. மக்கள் கையில் குறைவாகவே பணம் புழங்கும்
6. மக்கள் கையில் போதுமான பணம் இல்லாததால் மேற்கொண்டு பொருளாதார நடவடிக்கைகள் குறையும். இப்படியாக ரெசசன் சுழற்சி இருக்கும். இதில் நாம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கும் இடம் தான் வேலை இழப்பு.

ரெசசன் காரணம்

ரெசசன் காரணம்

ஒவ்வொரு முறையும் ரெசசன் வர ஒரு பிரத்யேக காரணம் இருக்கும். இந்த முறை ரெசசன் வர கொரோனா வைரஸ் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த வைரஸால் தான் தற்போது ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து இருக்கிறது என்றால் மிகை இல்லை. அப்படி என்ன பாதிப்பை இந்த கொரோனா வைரஸால் வரும் ரெசசன் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்..? என்று கேட்கிறீர்களா.

தினக் கூலி

தினக் கூலி

ஏற்கனவே கொரோனா வைரஸ் பயத்தால், அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லிவிட்டார்கள். ஆனால் இயந்திரங்களுக்கு மத்தியில் வேலை பார்க்கும் உற்பத்தி தொழிலாளர்களை என்ன செய்வது..? இப்படி நிறுவனத்தை நம்பி இருக்கும் பலருக்கும் அன்றாடம் கிடைக்க வேண்டிய கூலியோ சம்பளமோ கிடைக்கவில்லை என்றால், இயற்கையாகவே பொருளாதார நடவடிக்கைகள் குறையத் தானே செய்யும்.

படுத்த படுக்கையில் வியாபாரம்

படுத்த படுக்கையில் வியாபாரம்

ஏற்கனவே உலக அளவில் விமான சேவைத் துறை, உற்பத்தித் துறை, கடைகள், உணவகங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள் என பல வியாபாரங்களும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது இதில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்..? இதெல்லாம் பயத்தில் நாமே சொல்லிக் கொள்வது. கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..? என்கிறீர்களா.

சீனா உதாரணம்

சீனா உதாரணம்

கடந்த ஜனவரி 2020 மற்றும் பிப்ரவரி 2020 இரண்டு மாத காலத்தில் நடந்த சில்லறை விற்பனையை, 2019 ஜனவரி பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிட்டால் சுமார் 20.5 % வியாபாரம் சரிந்து இருக்கிறது. அதே போல தொழில் துறை உற்பத்தியும் சுமார் 13.5 % சரிந்து இருக்கிறது. அவ்வளவு ஏன் நிரந்தர சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் கூட 25 % சரிந்து இருக்கிறதாம். இப்போதைக்கு சீனா உடனடியாக எழுந்து வரும் என்கிற நம்பிக்கை இல்லை.

உலகம்

உலகம்

சீனாவில் ஷட் டவுன் எல்லாம் செய்ததால் வந்த விளைவு தான் மேலே சொன்ன சரிவுகள் எல்லாம். இப்படி பல நாடுகளும் தற்போது ஷட் டவுன் ஆகும் போது ஒட்டு மொத்த உலக பொருளாதாரம் எவ்வளவு அடி வாங்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவுக்கே இந்த அடியா

அமெரிக்காவுக்கே இந்த அடியா

உலகின் முன்னணி இன்வெஸ்மெண்ட் பேங்குகளின் ஒன்றான கோல்ட் மென் சாக்ஸ், உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட, அமெரிக்காவைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லி இருக்கிறது. அமெரிக்க பொருளாதாரம் இந்த 2020 ஜனவரி - மார்ச் வரையான காலாண்டில் 0 % வளர்ச்சி காணலாம், அதோடு அடுத்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 5 % வரை சரியலாம் எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

1.2 %-ல் இருந்து 0.4 %

1.2 %-ல் இருந்து 0.4 %

ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் 0.4 % மட்டுமே ஜிடிபி வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறது கோல்ட் மேன் சாக்ஸ். இதற்கு முன் இந்த 2020-ல் அமெரிக்க பொருளாதாரம் 1.2 % ஜிடிபி வளர்ச்சி காணலாம் எனச் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் ஒதுக்கி வைத்தால் கூட இரண்டு பேரின் எச்சரிக்கையை என்ன செய்வீர்கள்?

ரெசசன் வரும்

ரெசசன் வரும்

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியில், ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் டேவிட் வில்காக்ஸ் (David Wilcox) சொல்கிறார். "10 நாட்களுக்கு முன்பு வரை உலக பொருளாதாரம் ரெசசனை நோக்கிச் செல்கிறதா..? என்கிற நிலையற்ற தன்மை இருந்தது. இப்போது அந்த கேள்வி இல்லை" எனச் சொல்லி இருக்கிறார்.

ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்

ட்ரம்பின் பொருளாதார ஆலோசகர்

"உலக பொருளாதாரத்தில் ரெசசன் வருவதற்கான வாய்ப்பு கிட்டத் தட்ட 100 % இருக்கிறது" எனச் சொல்லி ரெசசன் நெருப்பில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவரான கெவின் ஹசெட் (Kevin Hassett). கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பார்க்கும் போதும் சரி, இவர்களின் அனுபவத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகளிலும் சரி, ரெசசனை நாம் எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Global recession: Chances of global recession are close to 100 percent

American president Donald trumps former economist kevin hassett said that the chances of a global recession are close to 100 percent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X