உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் சூழ்நிலையில், ரெசசன் வரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் சர்வதேச அளவிலான வளர்ச்சிகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சர்வதேச அளவிலான ரெசசன் கச்சா எண்ணெய் மற்றும் மற்ற கமாடிட்டிகளின் விலையை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடான இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த விலையில் இறக்குமதி
இதன் மூலம் அரசு குறைந்த விலையிலான பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்புகள் குறையலாம். அரசின் நிதி பற்றாக்குறைக்கு மத்தியில், இது உதவிகரமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் செலவினங்களை தற்காலிகமாக குறைக்க வழிவகுக்கலாம்.
இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு
ஆக ரெசசன் என்பது இந்தியாவுக்கு குறைந்த விலையிலான பொருட்களை பெற ஒரு வாய்ப்பாக அமையலாம். இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் உரங்களை பெரியளவில் இறக்குமதி செய்து வருகின்றது. இது உலக நாடுகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில் விலை குறையலாம். பல முக்கிய கமாடிட்டி பொருட்கள் விலை சரிவானது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்தியாவும் பொருளாதார மந்த நிலையில் சற்று இணைந்துள்ளது. எனினும் மற்ற நாடுகளை காட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நிலைமை சீரடைய காத்திருக்க வேண்டும். நிலைமை சீராகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2030க்குள் இந்தியா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியினை 2030க்குள் 25% சதவீத தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா தினசரி 5 மில்லியன் பேரல்கள் பெட்ரோலியத்தை பயன்படுத்துகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது.
நுகர்வோர் விலை குறியீடு
இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடானது சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இது 7.4% ஆக அதிகரித்துள்ளது. இது உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ள நிலையில் அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கமானது 22 மாத உச்சமான 8.6% எட்டியுள்ளது. இதே மற்ற முக்கிய பணவீக்கம் 6.3% ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பணவீக்க விகிதம் 9 வது மாதமாக ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாக இருந்து வருகின்றது.
விலைவாசி குறையலாம்
பருவம் மாறிய மழையால் காய்கறிகள் விலை, பழங்களின் விலையானது உச்சம் தொட்டுள்ளது. தானியங்கள் விலை கூட உச்சத்தில் தான் காணப்பட்டது. எனினும் இனி வரும் காலத்தில் அரசின் நடவடிக்கையும் காரீப் பருவ உற்பத்தியும் விலைவாசியினை கட்டுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
வட்டி விகித நிலவரம்
கடைசியாக நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 5.9% ஆக அதிகரித்தது. இது இனியும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வழிவகுக்கலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications