சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு தேவை குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இன்ஜினியரிங், ஜெம்ஸ் & ஜூவல்லரி உள்ளிட்ட முக்கிய துறைகளில் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவிலான பிரச்சனை வரவிருக்கும் மாதங்களில் சரியாகுமா? என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை சரியலாம்
சர்வதேச பணவீக்கம், ரஷ்யா - உக்ரைன் போர், சீனா - தைவான் பிரச்சனை என பலவும் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளவில் தேவையானது சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
மெதுவான வளர்ச்சி
சர்வதேச அளவிலான வணிக வளர்ச்சியானது 2022ம் ஆண்டில் 3% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 4.7% ஆக மதிப்பிடப்பட்டது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், மெதுவாக வளர்ச்சியால் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் சரியாகலாம்
குறிப்பாக OECD அமைப்பு, ஜி20 நாடுகளின் வளர்ச்சி விகிதமானது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கணிசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இதனால் அங்கு வணிக வளர்ச்சி விகிதமானது மந்த நிலையில் இருப்பதை காண முடிந்தது. இதனால் அங்கு தேவையானது சரிவினைக் கண்டு இருந்தது. எனினும் இது வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கலாம் என ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர்
வர்த்தக பற்றாக்குறை
ஏற்றுமதி குறைந்து இறக்குமதியானது அதிகரித்தால், அது வர்த்தக பற்றாக் குறையை அதிகரிக்கும். இது மேற்கொண்டு உள்நாட்டு கரன்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு வேலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிகள் 1.15% குறைந்து, 33 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில் வர்த்தக பற்றாக்குறையானது இரண்டு மடங்கு அதிகரித்து, 28.68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்தியாவிற்கும் பிரச்சனை தான்
ஆகஸ்ட் மாதத்தில் பொறியியல், ஜெம் & ஜூவல்லரி, ஜவுளிகள், பருத்தி நூல்/மேடை பொருட்கள் மற்றும் துணிகள் பலவற்றிலும் எதிர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. இது இனி வரவிருக்கும் மாதங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications