இந்தாண்டு (2025) உலக தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்கள் பணியாளர்களை குறைக்கும் முடிவை எடுத்துள்ளன. இதன் காரணமாக, பல ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். layoffs.fyi என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் இதுவரை 176-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில், மொத்தமாக 80,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி இழந்துள்ளனர். இதில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 25,000 பேர் வேலையை இழந்துள்ளனர்.
layoff அறிவித்துள்ள முக்கிய நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் (Microsoft), இன்டெல் (Intel) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆகியவை அடங்கும். இந்த நிறுவனங்கள் அனைவரும் தங்கள் நிறுவன அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் உள்ளன. மேலும் சந்தை தேவைகள், செலவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவை இந்த பணிநீக்கத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

செயற்கை தொழில்நுட்பம் காரணமாக தற்போது பல வேலைகள் மாறி வருகின்றன. இதனால், பல பாரம்பரிய வேலைகளும் தேவையற்றவையாகி வருகின்றன. இதனால், நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றன. அதே நேரத்தில், பல பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் தொடரும் என்ற நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சத்யா நடேல்லா, இந்த வேலைவிடுப்புகளை தொழில்துறையின் மாற்றத்துக்கு ஏற்ப நிறுவனத்தை மீளமைக்கும் ஒரு நடவடிக்கை என்று கூறியுள்ளார். சந்தை நிலைமைகள் மாறி வரும் சூழலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக அளவில் ஏஐ மற்றும் அதற்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. இதற்காக நிறுவனம் 80 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அதேபோல், உலகின் முன்னணி சிப்செட் தயாரிப்பு நிறுவனமான Intel, 2025 இறுதிக்குள் தங்களின் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையை 24,000 முதல் 25,000 வரை குறைக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, நிறுவனத்தின் சமீபத்திய நிதி நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.
இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையின் சுமார் 2% அதாவது, 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்தது. இது நிறுவனத்தில் உள்ள நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மாற்றங்கள் மற்றும் நிறுவன மறுசீரமைப்புகளுக்கு இடையில், Meta நிறுவனம் பெரும் அளவில் வேலைவிடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், நிறுவனம் தனது 3,600 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியுடன் இணைந்த மறுசீரமைப்புத் திட்டங்கள் உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், "Future Now" என்ற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், HP நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 7,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளது.
அதேபோல், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Andy Jassy வெளியிட்ட தகவலின்படி, Generative AI வளர்ச்சியால், சில பணிகளில் இனி மனிதர்களின் தேவை குறைவாக இருக்கும். இதனால், அமேசானின் கார்ப்பரேட் பணியாளர் குழு சுருக்கப்பட்டு, ஊழியர்கள் AI சார்ந்த திறன்கள் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதேபோல், உலகின் முக்கிய எலெக்ட்ரானிக் சாதன உற்பத்தியாளராக இருக்கும் Panasonic நிறுவனமும் 10,000 பணியாளர்களை, அதாவது அதன் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையின் 4% பணி நீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications