2025ஆம் ஆண்டுக்கான உலக வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை குறியீட்டு அதாவது பணிபுரிவதற்கு உகந்த நாடுகள் (Global Work-Life Balance Index) அறிக்கையின்படி நியூசிலாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, நார்வே, டென்மார்க், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் சிறந்த உலகின் முன்னணி நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு "Remote" எனும் குளோபல் லைஃப்-வொர்க் இன்டெக்ஸ் 2025 மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 நாடுகள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் சமநிலை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 42-வது இடம் பிடித்துள்ளது.
எப்படி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது..?: மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் உலகின் முதல் 60 முன்னணி பொருளாதார நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் அதிகபட்சமாக 100 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஊதியம், சட்டப்பூர்வ விடுப்புகள், மகப்பேறு மற்றும் பெற்றோர் விடுப்பு, சுகாதார சேவைகள், மகிழ்ச்சி, சராசரி வேலை நேரம், LGBTQ + உட்கொள்ளுதல் ஆகியவை மதிப்பீட்டுக்கான முக்கிய அம்சங்களாக முன்வைக்கப்பட்டு, உலகளாவிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

3-வது வருடமாக முதலிடத்தை பிடித்த நியூசிலாந்து: 2025ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்க்கை மற்றும் வேலை சமநிலை குறியீட்டில், நியூசிலாந்து மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இது மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக அந்த நாட்டின் முன்னணியை உறுதி செய்கிறது. சிறந்த ஆண்டு விடுமுறை, தரமான சுகாதாரம், பொது மகிழ்ச்சி, உயர் குறைந்தபட்ச ஊதியம் இவை அனைத்தும் இணைந்து, நியூசிலாந்தை வேலை மட்டும் அல்ல, வாழ்க்கையும் முக்கியம் என்று வலியுறுத்தும் நாடாக மாற்றியமைத்துள்ளன.
2ஆம் இடத்தில் அயர்லாந்து: பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் LGBTQ+ உள்ளடக்கிய பணிசூழல் ஆகியவற்றால் அயர்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது. தொழில்நுட்பம், கல்வி, நிதி உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் நிபுணர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக அயர்லாந்து மாறியுள்ளதால், இந்த நாடு 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
3ஆம் இடத்தில் பெல்ஜியம்: 2025 உலக வாழ்க்கை-வேலை சமநிலை குறியீட்டில், பெல்ஜியம் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைக்கும், வேலைக்கும் இடையிலான சமநிலையை நிலைநிறுத்தி, ஊழியர்களின் நலனை முன்னிலைப் படுத்தும் கொள்கைகள் மூலம் இந்த இடத்தை பெற்றுள்ளது. இங்கு தரமான பொதுச் சுகாதார வசதிகள், குடும்ப உழைப்பாளர்களுக்கான ஆதரவு, சிறந்த வேலை நேர சீரமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
4ஆம் இடத்தில் ஜெர்மனி: இங்கு நல்ல சம்பளம், வேலை நேர நெகிழ்வுத்தன்மை மற்றும் பெருந்தொகையான சுகாதார நன்மைகள் ஆகியவை ஜெர்மனியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், ஜெர்மனி 4ஆம் இடத்தை பிடித்துள்ளது.
5ஆம் இடத்தில் நார்வே: முழுமையான நலத்திட்டங்கள், பொதுப் பாதுகாப்பு மற்றும் நம்பகமான வேலைவாய்ப்பு சூழல் ஆகியவற்றால், நார்வே 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.
6ஆம் இடத்தில் டென்மார்க்: குடும்பத்திற்கு உகந்த கொள்கைகள், பணி நேர நெகிழ்வுத்தன்மை மற்றும் உயர் மகிழ்ச்சி மதிப்பீடுகள் ஆகியவை டென்மார்க் மக்களுக்கு ஆதரவாக உள்ளன.
7ஆம் இடத்தில் கனடா: 2025 உலக வாழ்க்கை-வேலை சமநிலை குறியீட்டில், கனடா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும், குறிப்பாக மாறுபட்ட இனங்களையும் பாலின அடையாளங்களையும் சேர்ந்தவர்களுக்கும், சமத்துவம் மற்றும் நலத்திற்கான இடமாக திகழ்கிறது. வேலை நேரம் மற்றும் தனிநேரத்தை தெளிவாக பிரிக்கும் பணிச் சட்டங்கள் மற்றும் பணியாளருக்கு உகந்த பணியமைப்பு ஆகியவை கனடாவுக்கு இந்த இடத்தை கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஃபின்லாந்து: இந்த நாடுகள் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு கொள்கைகள், நீண்ட விடுமுறை, சுகாதார வசதி, மற்றும் உயர் மகிழ்ச்சி மட்டம் ஆகியவற்றால் டாப் 10 பட்டியலில் நீடிக்கின்றன. இந்த பட்டியலில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்தியா 42-வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications