கோடை வெயில் பொளந்துக்கட்டும் வேளையிலும், விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையிலும் மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் பெங்களூர் தண்ணீர் பிரச்சனை காரணம் காட்டி சொந்த ஊருக்கே சென்றுள்ளனர்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, நொய்டா, டெல்லி, மும்பை, கொச்சி என நாட்டின் அனைத்து பெருநகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்குக் கட்டாயப்படுத்தி வரவழைத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக நாட்டின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட காலகட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது.
மென்பொருள் நிறுவனமான க்ளோபண்ட் எஸ்.ஏ, (Globant SA) கொரோனா தொற்றுநோய் காலத்திற்குப் பின், பணிச்சூழலில் புதுமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் மிகோயா அண்மையில் Bloomberg செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Globant நிறுவனம் இந்தியாவிலும் இயங்கி வருகிறது, பெங்களூரில் அலுவலகம் வைத்துள்ளது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்ப அழைத்து வரும் நிலையில், க்ளோபண்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 33 நாடுகளில் பரவியுள்ள தனது 30,000 ஊழியர்களுக்கும் முழுமையான வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை (work from home) நிரந்தரமாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
Bloomberg செய்தி நிறுவனத்தின் தகவல்படி, க்ளோபண்ட் நிறுவனத்தின் சிஇஓ மார்ட்டின் மிகோயா, ஊழியர்கள் மத்தியிலான நேருக்கு நேர் நடக்கும் கலந்துரையாடல் முக்கியத்துவம் என்பதை உணர்ந்தவர், ஆனால் இது கட்டாயப்படுத்திச் செயல்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
க்ளோபண்ட் தனது அலுவலகங்களுக்கான இடத்தை அதிகரித்து வருகிறது, மேலும் ஊழியர்கள் இயல்பாகவே அலுவலகத்திற்குத் திரும்புவதையும் கவனித்து அதற்கேற்ப அலுவலகத்தை மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைப்பதில் எவ்விதமான பயனுமில்லை என்பதை உறுதியாக மார்ட்டின் மிகோயா மற்றும் க்ளோபண்ட் நிறுவனத்தின் நிர்வாகம் நம்புகிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications