கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவை தளங்களான Gmail, யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் ஆகியவை முடங்கியது. இந்த சேவைகளை நம்பி பணியாற்றி வரும் பல கோடி பேர் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பு இந்தியாவில் மட்டுமா அல்ல உலகின் பிற நாடுகளிலும் உள்ளதா என கேள்வி எழும் இதே வேளையில் டிவிட்டரில் Youtubedown என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.
Gmail, யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் சேவை முடக்கம் சில நிமிடங்களில் சரியாகிவிட்டதாக தெரிகிறது. குறிப்பாக யூடியூப் மற்றும் ஜிமெயில் சில நிமிடத்தில் இயங்க துவங்கியுள்ளது. இதற்குள் டிவிட்டரில் கமெண்ட் பறக்க துவங்கியுள்ளது.
சில வாரங்களுக்கும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது, இதை தொடர்ந்து முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின் சேவைகளும் முடங்கியுள்ளது. பெரிய நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைக்க திட்டமிடும் வேளையில் டெக் சப்போர்ட்-ஐ கவனிக்க மறந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளையில் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை AI Chatbot பிரிவில் பெரிய அளவில் போட்டிப்போட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் ஒருப்பக்கம் ChatGPT வைத்து பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து கூகுள் இடத்தை பிடிக்க திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் ChatGPT-க்கு போட்டியாக Bard என்னும் புதிய AI Chatbot-ஐ உருவாக்கி இன்று அமெரிக்கா, ஐரோப்பாவில் மக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இது கூகுள் Bard AI Chatbot-ன் முக்கிய சோதனை திட்டமாக இருக்கும் வேளையில் இதன் வெற்றியும், மக்களின் கருத்துக்களும் மிகவும் முக்கியம். கூகுள் உடன் போட்டிப்போடுவது கடினம் என்பதால் சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து சேவைகளிலும் ChatGPT சேவையை கொண்டு வருகிறது.
ஸ்கிரீன்ஷாட்
இந்த நிலையில் இன்று காலையில் இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பிராடெக்-களான Gmail, யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் ஆகியவை முடங்கியது. இதனால் டிவிட்டரில் ட்வீட்கள் பறக்க துவங்கியது.
பல சேவைகள் முடக்கம்
கூகுள் மட்டும் அல்லாமல் பல நிறுவனத்தின் சேவைகளும் முடங்கியுள்ளதாக பியூஷ் தெரிவித்துள்ளார்.
20 நிமிடம்
யூடியூப்-ல் யாருக்கேனும் ஏதேனும் பிரச்சனையா..? கடந்த 20 நிமிடங்களாக இயங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஜிமெயில்
ஜிமெயில் கணக்குகள் உடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளது என வருண் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications