இந்திய விமான போக்குவரத்து துறையில் முக்கிய நிறுவனமாக இருந்த Go Airlines கடன் மற்றும் நிதி நிலுவை காரணமாக திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்திற்கு தீர்வு காண தனது குழுவை நிறுவன சட்ட தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
மே 30 ஆம் தேதி வரையில் அனைத்து கோ பர்ஸ்ட் விமானங்களின் டிக்கெட்களும் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் பைலட் மற்றும் முதல் அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற துவங்கியுள்ளனர்.

இந்தியாவில் திவாலானதாக அறிவிக்கப்பட்ட அல்லது கடுமையான நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்ட எந்தொரு விமான நிறுவனமும் மீண்டும் வந்தது இல்லை, இந்த நிலையில் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் பைலட்கள் வேறு நிறுவனத்தில் சேர தயாராகியிருக்கும் வேளையில் கோ பர்ஸ்ட் நிர்வாகம் பைலட்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க திட்டமிட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி கோ ஏர்லைன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் கேப்டன்களுக்கு மாதம் 100000 ரூபாயும், First Officer-களுக்கு 50000 ரூபாயும் கூடுதலாக வழங்க திட்டமிட்டும் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூடுதல் தொகையை கோ பர்ஸ்ட் நிர்வாகம் ஊழியர்களை தக்க வைக்க retention allowance அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த கூடுதல் சம்பளம் ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது, அதாவது ஜூலை 1 ஆம் தேதி கூடுதல் சம்பளத்தை கேப்டன்களும், பர்ஸ்ட் ஆபீசர்களும் பெறுவார்கள்.
இதேபோல் ஜூன் 15 ஆம் தேதிக்குள் ராஜினாமா கொடுத்தவர்கள் அதை திரும்ப பெறவும் வாய்ப்பு கொடுத்துள்ளது, இதோடு தொடர்ந்து ஊழியர்களை தக்க வைக்கும் முயற்சியாக நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றியதற்காக longevity bonus கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளது கோ பர்ஸ்ட்.

கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களை இயங்கும் கேப்டன்கள் தற்போது சராசரியாக மாதம் 5.3 லட்சம் ரூபாயை சம்பளமாக பெறுகின்றனர், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 7.5 லட்சம் ரூபாய் சராசரியாக அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வித்தியாசத்தை குறைக்கவும், ஏற்கனவே அணுபவம் உள்ள கேப்டன்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள சம்பள உயர்வு குறித்து திட்டமிட்டப்பட்டு வருகிறது.
இந்திய விமான போக்குவரத்து சந்தையில் தற்போது அதிகப்படியான பைலட் உட்பட அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. இதனால் கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் குவிந்துக் கிடக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக இருக்கும் இண்டிகோ 5000 ஊழியர்களை பணியில் சேர்க்க தயாராக உள்ளது. இதேபோல் ஏர் இந்தியா 4200 கேபிள் க்ரூ அதிகாரிகளையும், 900 பைலட்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் பணியில் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications