எரிபொருள்-ஐ சப்ளை செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் நிலுவைத் தொகை செலுத்தாத நிலையிலும், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவின் பழமையான வாடியா குழுமத்திற்கு சொந்தமான கோ ஃபர்ஸ்ட் மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கான விமானங்களை மொத்தமாக நிறுத்துவதாக முதலில் அறிவித்தது.

இதனால் இந்த நாளில் டிக்கெட் புக் செய்த அனைவருக்கும் பயணம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இணையத்தில் கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் டிக்கெட் புக் செய்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்த வேளையிலேயே செவ்வாய்கிழமை கோ ஃபர்ஸ்ட் டெல்லி-யில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்து நிறுவனத்திற்கு தீர்வு காணும் பணிகளை துவங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இது பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் வாடியா குழுமத்தின் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் வீழ்ச்சி எங்கு துவங்கியது, எதனால் இந்த பிரச்சனை உருவானது என்பதை கட்டாயம் ஏர்லைன்ஸ் துறை முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் லாபத்தையும், வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இல்லை என்றாலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வரும் நிறுவனமாகவே இருந்தது. இந்த நிலையில் தான் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் இன்ஜின்கள் அடுத்தடுத்து பழுதாக துவங்கியது.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான இன்ஜின்களை அமெரிக்காவின் Pratt & Whitney நிறுவனம் தயாரித்தது. இந்த இன்ஜின்கள் பழுதானது மட்டும் அல்லாமல் அதற்காக உதிரி பாகங்களின் சப்ளையும் தடைப்பெற்று அதிகளவிலான வர்த்தக பாதிப்பை உருவாக்கியது. இதனால் மொத்த விமானத்தில் சுமார் 50 சதவீத விமானங்கள் தரையிறக்கப்பட்டது, இதை தொடர்ந்து மத்திய ஏவியேஷன் அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் Pratt & Whitney இன்ஜின் கொண்ட விமானங்களை கண்காணிக்க துவங்கியது.

இதன் எதிரொலியாக எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் தரையிறக்கப்பட்டு நிதி நெருக்கடியில் மாடிக்கொண்டது. பாதிக்கும் அதிகமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டதால் நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டது என கோ ஃபர்ஸ்ட் சிஇஓ கவுசிக் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் திவாலானதாக அறிவித்தது கோ பர்ஸ்ட், NCLT அமைப்பில் கொடுத்த அறிக்கையில் சுமார் 6,521 கோடி ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு செலுத்த வேண்டும் என விளக்கம் கொடுத்தது. Go First நிறுவனம் சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, IDBI பேங்க், ஆக்சிஸ் பேங்க், Deutsche bank ஆகிய வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேபோல் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் விமான நிறுவனத்தின் மொத்த கடன் மற்றும் நிலுவை தொகை 1,14,63 கோடி ரூபாயாக உள்ளது என்று கோ பர்ஸ்ட் தாக்கல் செய்த அறிக்கை காட்டுகிறது. இந்த மொத்த தொகையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் விமானக் குத்தகைதாரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் அடங்கும்.


Click it and Unblock the Notifications