இந்திய விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், பிரபல கோ பர்ஸ்ட் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் கோ பர்ஸ்ட் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இதை வாங்க பலரும் போட்டிப்போட்டு வந்த நிலையில், தற்போது முக்கியமான நிறுவனம் போட்டியில் இருந்து விலகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் (DGCA) கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான 54 விமானங்களைப் பதிவிலிருந்து நீக்கிய பின்னர், ஈஸ் மை ட்ரிப் இணை நிறுவனர் & தலைமை செயல் அதிகாரி நிஷாத் பிட்டி, மே 25 ஆம் தேதி தனது ஏலத்தை விருப்ப விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றார்.

நிதி சிக்கலில் சிக்கியுள்ள இந்த விமான நிறுவனத்திற்கான முக்கிய ஏலதாரர்களில் ஈஸ் மை ட்ரிப் சிஇஓ நிஷாத் பிட்டி ஒருவர் ஆவார். இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
"கவனமாக பரிசீலித்த பிறகு, தனிப்பட்ட முறையில் கோ ஃபர்ஸ்ட் ஏலத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த முடிவு எங்கள் நீண்ட கால திட்டங்கள் மற்றும் வளர்ச்சி இலக்குகளுடன் சாத்தியப்படுத்த இந்த முயற்சிகளில் கவனம் செலுத்த எனக்கு வழிவகுக்கிறது," என்று நிஷாத் பிட்டி கூறினார்.
ஈஸ் மை ட்ரிப் நிறுவனர், தற்போது செயலிழந்த விமான நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் உடன் இணைந்து செயல்பட்டு வந்த கன்சோர்டியத்தை வழிநடத்தி வந்தார். இந்த கன்சோர்டியத்தின் பெயர் பிஸி பீ ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் (BBAPL) என்ற நிறுவனம் மூலமாக இணைந்து முதலில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பம் கொடுத்தனர்.
பிஸி பீ ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்பது நிஷாத் பிட்டி மற்றும் அஜய் சிங் இடையேயான கூட்டு நிறுவனம். அஜய் சிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பதைத் தவிர, ஸ்பைஸ்ஜெட்டில் 37.95 சதவீத பங்குகளையும், அஜய் சிங் ஹெச்.யூ.எஃப் (HUF) மூலம் 5.92 சதவீத பங்குகளையும் வைத்திருக்கிறார். பிபிஏபிஎல் நிறுவனத்தில் நிஷாத் பிட்டி பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறார்.
நிஷாத் பிட்டி-யின் இந்த முடிவு, ஜனவரி-மார்ச் 2024 காலாண்டில் ஈஸ் மை ட்ரிப் நிறுவனம் ரூ.15 கோடி நிகர இழப்பை சந்தித்து வருகிறது. இது முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் ரூ.31 கோடி நிகர லாபத்தைக் காட்டிலும் மோசமான நிலையாகும்.
பிட்டி இந்த ஏலத்திலிருந்து விலகிய நிலையில், அஜய் சிங் தனி ஆளாக கோ ஃபர்ஸ்ட்டை தொடர்ந்து ஏலம் எடுப்பாரா என்பது இப்போது தெளிவாக தெரியவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications