இந்தியாவின் விமான சேவை நிறுவனங்கள் வேகமாக விரிவாக்கம் செய்து வரும் வேளையில், பல ஆண்டுகளாக இந்திய மக்களுக்கு சொகுசு விமான பயணத்தை வழங்கி வந்த Go First நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு Go First நிறுவனத்தின் உரிமையாளரான இந்தியாவின் பழமையான வர்த்தக குழுமமான வாடியா குழுமம், இந்நிறுவனத்தின் பெரும் பகுதியையோ அல்லது மொத்தமாகவோ விற்பனை செய்து விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா ஏர்லைன்ஸ், இண்டிகோ ஆகியவை புதிய விமானங்களை ஆர்டர் செய்தும், புதிய இடங்களுக்கு விமானங்களை இயக்குவது என நிலையான வர்த்தக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை செய்து வருகிறது. இந்த நிலையில் விமான எரிபொருளுக்கு பணம் கொடுக்க முடியாமல் முடங்கியுள்ளது Go First.
பொதுவாகவே விமான நிறுவனங்களுக்கு அதிகப்படியான செலவு என்றால் அது விமான எரிபொருள் தான். இந்த நிலையில் விமான எரிபொருள்-ஐ சப்ளை செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் நிலுவைத் தொகை காரணமாக வாடியா குழுமத்திற்கு சொந்தமான கோ ஃபர்ஸ்ட் மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் வாடியா குழுமத்தால் தொடர்ந்து Go First விமான நிறுவனத்தை இயக்க முடியாத நிலையில் இன்று டெல்லி-யில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்து நிறுவனத்திற்கு தீர்வு காணும் பணிகளை துவங்குவதாக அறிவித்துள்ளது.
அதன் ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தை இயக்கும் பிராட் & விட்னி இன்ஜின்களில் இருந்து எஞ்சின்கள் வழங்கப்படாததாலும், தொடர்ச்சியான சிக்கல்களாலும் அதன் மொத்த விமானத்தில் பாதிக்கும் அதிகமான விமானங்கள் தரையிறங்கியுள்ளதால், விமான நிறுவனத்தின் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Go First விமான நிறுவனத்தை இயக்க முடியாத நிலையில் இன்று டெல்லி-யில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்துள்ள நிலையில் இந்நிறுவனத்தின் பணியாற்றி வரும் 5000 த்திற்கும் அதிகமான ஊழியர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications