தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) இன்று நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள Go First விமான நிறுவனம் கொடுத்த insolvency resolution கோரிக்கையை ஏற்றுக்கொண்டு திவாலாக அறிவிக்கப்பட்டு இந்நிறுவனத்திற்கும் அதன் கடனுக்கு தீர்வு காண ஒப்புக்கொண்டு உள்ளது.
வாடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்துக்கொண்டு தீர்வு கான விண்ணப்பம் கொடுத்த நிலையில், NCLT-யில் நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மற்றும் எல்.என்.குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடனில் சிக்கியுள்ள நிறுவனத்தை நடத்துவதற்கு இடைக்கால தீர்மான நிபுணராக (IRP) அல்வாரெஸ் மற்றும் மார்சல் நிறுவனத்தின் அபிலாஷ் லால் நியமிக்கப்பட உள்ளதாக இரு உறுப்பினர்கள் அடங்கிய பென்ச் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் கோ பர்ஸ்ட் நிறுவனத்தை மோரோடோரியம் பாதுகாப்பின் கீழ் வைத்தது, இடைக்கால தீர்மான நிபுணர் இந்நிறுவனத்திற்கு தீர்வு காணும் வரையில் இயக்க நிர்வாக குழுவுக்கு முழுமையாக உதவுமாறு உத்தரவிட்டது.
மேலும், கோ பர்ஸ்ட் நிறுவனத்திற்கு தீர்வு காணும் வரையிலான காலக்கட்டத்தில் தொடர்ந்து நிறுவனத்தை இயக்குவதற்கு மத்தியில் எந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டது NCLT அமைப்பு. இந்திய வானில் சுமார் 17 வருடமாக பறந்து பல லட்சம் மக்களுக்கு விமான சேவை அளித்த கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் தற்போது திவாலாகி, நிறுவனத்திற்கு தீர்வு காண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

கோ பர்ஸ்ட் நிறுவனம் திவாலாகி நிறுவனகத்திற்கு தீர்வு காண விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தின் நிதி நிலையை ஆய்வு செய்ய இடைக்கால தீர்மான நிபுணராக (IRP) அல்வாரெஸ் மற்றும் மார்சல் நிறுவனத்தின் அபிலாஷ் லால் நியமிக்கப்பட்டு உள்ளார். அபிலாஷ் லால் நிறுவனத்தின் நிதி நிலையை ஆய்வு செய்து திர்வு காணும் பணியை செய்வார்.
தற்போது சந்தையில் வெளியான தகவல் படி கோ பர்ஸ்ட் நிறுவனம் சுமார் 11,463 கோடி ரூபாய் அளவிலான கடனை கொண்டு உள்ளது. இதேவேளையில் கோ பர்ஸ்ட் நிர்வாகம் அபிலாஷ் லால் நிர்வாகத்தை கையில் எடுக்க ஏதுவாக மே 19ஆம் தேதி வரையில் அனைத்து சேவைகளையும் முடக்கியுள்ளது. இதன் மூலம் மே 19 ஆம் தேதி வரையில் விமான டிக்கெட் புக் செய்தவர்கள் பயணம் செய்ய முடியாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications