எரிபொருள்-ஐ சப்ளை செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் நிலுவைத் தொகை காரணமாக வாடியா குழுமத்திற்கு சொந்தமான கோ ஃபர்ஸ்ட் மே 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கான விமானங்களை மொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த நாளில் டிக்கெட் புக் செய்த அனைவருக்கும் பயணம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் வாடியா குழுமத்தால் தொடர்ந்து Go First (கோ பர்ஸ்ட்) விமான நிறுவனத்தை இயக்க முடியாத மோசமான நிதி நெருக்கடியில் மாட்டிக் கொண்டு உள்ளது. இதன் வாயிலாக செவ்வாய்க்கிழமை டெல்லி-யில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்து நிறுவனத்திற்கு தீர்வு காணும் பணிகளை துவங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் விமான சேவைகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் Go First (கோ பர்ஸ்ட்) போன்ற பிரபலமான விமான நிறுவனம் திவாலானதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இது இந்தியாவில் புதியதில்லை. இந்தியாவில் பல விமான சேவை நிறுவனங்கள் இதற்கு முன்பு திவாலாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரையில் NEPC Airlines, Damania Airways, Jet Airways, Kingfisher Airlines, Deccan Aviation மற்றும் Paramount Airways என பல நிறுவனங்கள் திவாலாகியோ அல்லது வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டோ முடங்கியுள்ளது.
இந்தியாவில் ஆடம்பர விமான சேவைக்கு பெயர் போன கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காகவே விஜய் மல்லையா அதிகப்படியான கடனை வாங்கி மாட்டிக்கொண்டார். இன்றளவும் கிங்பிஷர் காலண்டர், கிங்பிஷர் ஏர் ஹோஸ்டஸ்-கள் பிரபலம்.
சென்னையை தளமாகக் கொண்ட NEPC குழுமத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் NEPC ஏர்லைன்ஸ். காற்றாலை விசையாழிகளை விற்பதன் மூலம் பெரும் பணத்தை ஈட்டிய NEPC குழுமம் மருந்துவம், டெக்ஸ்டைல் மற்றும் பிற துறைகளிலும் இறங்கி வந்தது. 1993 முதல் 1997 வரையில் மட்டுமே இயங்கி வந்த NEPC Airlines ரிசர்வேஷன் சிஸ்டத்திற்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் முடங்கியது.
இந்திய அரசு விமான போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டை நீக்கிய பின்னர் அதாவது deregulation செய்த பின்பு இத்துறை வணிகத்தில் இறங்கிய முக்கியமான தனியார் விமான நிறுவனங்களில் ஒன்று மோடிலஃப்ட் (ModiLuft). 1993 ஆம் ஆண்டில் எஸ்.கே.மோடி என்பவர் ஜெர்மனியின் லுஃப்தான்சா நிறுவனத்துடனான தொழில்நுட்ப கூட்டுறவில் ModiLuft நிறுவனத்தை துவங்கினார்.
எஸ்.கே.மோடி மற்றும் ஜெர்மனியின் லுஃப்தான்சா மத்தியிலான கூட்டணி விரைவில் முறிந்த நிலையில் ஏர் ஆப்ரேட்டர் லைசென்ஸ்-ஐ ஸ்பைஸ்ஜெட் வாங்கி விமான சேவை துறையில் குதித்தது. ஸ்பைஸ்ஜெட் முடங்கவில்லை என்றாலும் அதன் உரிமையும் அசல் ப்ரோமோட்டரான அஜய் சிங்கிடம் இருந்து கலாநிதி மாறனுக்கும் மாறியது. சில வருடங்களிலேயே மீண்டும் அஜய் சிங்குக்கும் மாறியது.
இந்திய விமான சேவையில் மற்றொரு குறிப்பிடத்தக்க விமான நிறுவனம் மற்றும் குறைந்த கட்டண விமான சேவையின் முன்னோடி டெக்கான் ஏவியேஷன் ஜி.ஆர். கோபிநாத். உங்களுக்கு இந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருக்கும், சூர்யா நடித்த சூரரை போற்று படம் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் தான்.
டெக்கான் ஏவியேஷன் போதுமான பணம் இல்லாமல் முடங்கும் வேளையில் இந்த விமான நிறுவனம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் உடன் இணைக்கப்பட்டது. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பெரும் நஷ்டம், கடன் ஆகியவற்றால் 2012 இல் மூடப்பட்டது.
இதேபோல், 1993 இல் நிறுவப்பட்ட ஜெட் ஏர்வேஸ் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தது. ஆனால் புதிய நிறுவனங்கள் உருவாக்கிய விலை போர்-ன் விளைவாக ஜெட் ஏர்வேஸ் நஷ்டம் அடைந்தது மற்றும் இறுதியாக 2019 இல் செயல்பாடுகளை நிறுத்தியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications