இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான DGCA, நிதி நெருக்கடியால் மாட்டிக்கொண்டு, திவாலானதாக அறிவிக்கப்பட்டு தீர்வு காணும் நிலையில் இருக்கும் Go First நிறுவனம் தனது சேவைகளை சில வாரங்களுக்கு முன்பு நிறுத்தியது. இந்த நிலையில் பல ஆயிரம் விமான பயணிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மீண்டும் இயக்குவதற்கான திட்டத்தை முன்வைத்திருந்த நிலையில் DGCA அமைப்பு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது. ஆனால் அனுமதி கொடுத்த கையோடு சில நிபந்தனைகளையும் முன் வைத்தது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் வர்த்தக ரீதியான விமான சேவைகளை துவங்குவதற்கு முன்பு, இந்நிறுவனகத்தின் விமான சேவை லே மற்றும் லே அருகில் இருக்கும் Thoise பகுதிக்கு இராணுவத்திற்கான விமான சேவையை இயக்க வேண்டும் என்ற முக்கிய கண்டிஷன் வைக்கப்பட்டு உள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் பெரும்பாலான விமானங்களை இயக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ஏலத்தில் இத்திட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிசிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்ட திர்ப்பாயம் முன்நிலையில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்களின் முடிவுகளுக்கு உட்பட்டு, ஜூன் 28 தேதியில் சமர்ப்பிக்கப்பட் கோ ஃபர்ஸ்ட் மறுதொடக்கத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியது.
மேலும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை வைத்திருக்கும் நிலையில் இந்த உரிமைத்தை வைத்திருக்க கூடிய அனைத்து ஒழுங்குமுறைத் விதிகளையும் பூர்த்தி செய்யப்பட்டதை உறுதி செய்தால் Go First தனது விமான சேவையின் செயல்பாடுகளைத் தொடங்கலாம் என்று DGCA கூறியுள்ளது. மேலும் பயணிகள் சேவைக்காக பயன்படுத்தும் விமானத்தின் விமானத் தகுதியை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தொடர வேண்டும் என்பதை முக்கிய கண்டிஷனாக வைத்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அதன் அனைத்து விமானங்களும் ஜூலை 23, 2023 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மறு இயக்கத்திற்கான அனுமதியை கொடுத்துள்ள காரணத்தால் உரிய தகுதியை உறுதி செய்யப்பட்ட உடன் விமானத்தை இயக்க உள்ளது.
நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு திவாலானதாக அறிவிக்கப்பட்டு இந்நிறுவனத்திற்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விமான சேவை இயக்குவதன் மூலம் தீர்வு காணும் போது சிறப்பான தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கோ ஃபர்ஸ்ட் அடுத்த சில நாட்களில் 22 விமானங்களையாவது இயக்க திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications