இந்தியாவில் விமான பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதேவேளையில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்யவும் நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகள் அனைத்தையும் விமான போக்குவரத்து மூலம் இணைக்க அதிகப்படியான விமானங்களை வாங்கி குவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை கொண்டு நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வாடியா குழுமம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான துறையில் அதிகப்படியான போட்டி நிலவும் வேளையில் லாப அளவுகளும் குறைகிறது.

இதேபோல் விமான எரிபொருளின் அதிகப்படியான விலை விமான நிறுவனங்களுக்கு சுமையாக உள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தையும் பெரிய அளவில் அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு லாபத்தையும் காட்டுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் புதிய வர்த்தகத்தை ஈர்க்க முடியாத நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவது இயல்பு.
இந்த நிலையில் வாடியா குழுமத்திற்கு சொந்தமான கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை விற்க அல்லது முழுமையாக பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபிராட் & விட்னி (பி&டபிள்யூ) ஜெட் என்ஜின்கள் தொடர்பான பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் பாதிக்கும் அதிகமான விமானங்கள் செயல்படாமல் தரையிறங்கியுள்ளது. இந்த நிலையில் 2022 ஆம் நிதியாண்டில் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் அதன் வரலாற்று அதிகபட்ச வருடாந்திர நிதி இழப்பைச் சந்தித்தது.

இந்த பிரச்சனை காரணமாக இந்திய உள்நாட்டு விமான சேவை துறை சிறப்பாகவும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்தாலும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை தனது ஆப்ரேஷன் பிரச்சனைகளால் இழந்து வருகிறது.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் கொரோனாவுக்கு பின்பு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மத்திய அரசின் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் (ECLGS) கீழ் 600 கோடி ரூபாய் அளவிலான கடனைப் பெற்றது. இதை தொடர்ந்து தனியாக வாடியா குழுமம் கடந்த 15 மாதங்களில் சுமார் 3,000 கோடி ரூபாய் தொகையை கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தில் நிதி உட்செதுத்தியது.


Click it and Unblock the Notifications