சென்னை: இந்தியாவின் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை பார்சூன் இந்தியா செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட நிலையில், இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான். 2வது இடத்தில் நம்ம தளபதி விஜய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5 திரைக்கு வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை சுமார் 400 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த படம் மங்காத்தா போல் ரசிகர்களை மனம் கவருமா என்ற பெரும் கேள்விக்கு அடுத்த சில மணிநேரத்தில் பதில் தெரிந்துவிடும்.

இந்த பார்சூன் இந்தியா பத்திரிக்கை இந்தியப் பிரபலங்கள் 2024 ஆம் நிதியாண்டில் செலுத்திய அன்வான்ஸ் டாக்ஸ் விபரங்களை அடிப்படையாக வைத்து யார் அதிகமான வரி செலுத்தியுள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட், விளையாட்டு மற்றும் தென்னிந்தியத் திரையுலகின் சில பெரிய பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
2024 நிதியாண்டுக்கான முன்கூட்டிய வரி செலுத்துதல் தரவுகள் அடிப்படையில் அதிர்ச்சியூட்டும் வகையில் பாலிவுட் கிங் ஷாருக் கான் சுமார் ரூ.92 கோடியை வரியாகச் செலுத்தியுள்ளார். ஷாருக் கான் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன், பிராண்ட் ஒப்பந்தம், பிற வணிகங்கள் மூலம் கிடைத்த வருமானத்திற்காக சுமார் ரூ.92 கோடியை வரி செலுத்தியுள்ளனர்.
அவரைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் தளபதி விஜய் இருக்கிறார், பாலிவுட்டின் பல முக்கிய நடிகர்களை பின்னுக்குத்தள்ளி 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் விஜய். 2024ஆம் நிதியாண்டில் நடிகர் விஜய் ரூ.80 கோடி வரி செலுத்தியுள்ளார்.
இப்பட்டியலில் 3வது இடத்தில் சல்மான் கான் ரூ.75 கோடி உடன் உள்ளார், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ரூ.71 கோடியை வரியாகச் செலுத்தியுள்ளார். பிற பிரபலங்கள் போலவே சல்மான் கான், அமிதாப் பச்சன் திரைப்படங்கள், விளம்பரங்கள், பிற முதலீடுகள் வாயிலாக அதிக முதலீட்டைப் பெற்றாலும், இவ்விருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெறுகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து கிரிக்கெட் ஸ்டாரான விராட் கோலி ரூ.66 கோடி வரியாக செலுத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். எம்.எஸ். தோனி (ரூ.38 கோடி) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (ரூ.28 கோடி) ஆகியோர் முதல் 10 பட்டியலில் இடம்பெற்ற மூன்று விளையாட்டு வீரர்கள் ஆவார்.
இவர்களுடன், முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி (ரூ.23 கோடி) மற்றும் ஹர்திக் பாண்டியா (ரூ.13 கோடி) போன்றவர்களும் டாப் 20 பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
இதற்கிடையில், பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ரூ.42 கோடியும், ரன்பீர் கபூர் ரூ.36 கோடியும், ரித்திக் ரோஷன் ரூ.28 கோடியும் வரியாக செலுத்தி டாப் 10 பட்டியலில் இடம் பிடித்தனர்.
இவர்களை தொடர்ந்து காமெடி நடிகரான கபில் சர்மா (ரூ.26 கோடி), கரீனா கபூர் (ரூ.20 கோடி), ஷாஹித் கபூர் (ரூ.14 கோடி) மற்றும் கத்ரினா கைஃப் (ரூ.11 கோடி) மோகன் லால் (ரூ.14 கோடி), அல்லு அர்ஜுன் (ரூ.14 கோடி, கியாரா அத்வாணி ரூ.12 கோடி, ஆமிர் கான் ரூ.10 கோடி வரியை செலுத்தியுள்ளார். இதில் கியாரா அத்வானி 20வது இடத்தையும், ஆமிர் கான் 21வது இடத்தையும் பிடித்துள்ளார்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

TVK தலைவர் விஜய்-யின் சொத்து விவரங்கள்.. இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. மொத்தம் ரூ.625 கோடி!!

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications