சிகரெட் நிறுவன முதலீட்டாளர்களுக்கு யோகம்.. அம்பானி போலவே போனஸ் பங்குகள் கொடுக்கிறதாம்..!

காட்ஃப்ரே பிலிப்ஸ் போனஸ் வெளியீடு: சிகரெட் தயாரிப்பு லார்ஜ்கேப் நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் நிறுவனம் (Godfrey Phillips) வரும் செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமையன்று அதன் 87 ஆவது இயக்குநர்கள் குழு ஆண்டு பொதுக்கூட்டத்தை (AGM) நடத்தப்போவதாக இன்று பரிமாற்றங்களுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, முதலீட்டாளர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, காட்ஃப்ரே பிலிப்ஸ் போர்டு 1:2 போனஸ் வழங்க பரிசீலிக்க போவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், இன்று பங்குகள் எப்போதும் இல்லாத அளவிற்கு பங்குகள் உயர்ந்துள்ளது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் வரவிருக்கும் வாரியக் கூட்டத்தில் பங்குதாரர்களுக்கு போனஸ் வழங்குவதைக் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவேளை இது அங்கீகரிக்கப்பட்டால் காட்ஃப்ரே பிலிப்ஸ் போனஸ் வெளியீட்டில் ஒரு 1:2 போனஸ் என்பது பங்குதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இலவசப் பங்குகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிகரெட் நிறுவன முதலீட்டாளர்களுக்கு யோகம்.. அம்பானி போலவே போனஸ் பங்குகள் கொடுக்கிறதாம்..!

பங்குதாரர்களின் ஒப்புதலுக்காக, இருப்புக்களை மூலதனமாக்குவதன் மூலம் போனஸ் பங்குகளை வழங்குவதை நிறுவனத்தின் வாரியம் பரிசீலித்து வெளியிடும் என்று கூறப்படுகிறது. தலா ரூ.2 என நிறுவனத்தின் பங்குகள் பங்குதாரர்களுக்கு இருப்புக்களின் மூலதனமாக்கல் மூலம் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. எனவே, காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்கு விலை, இன்று செப்டம்பர் 6 வர்த்தகத்தில் புதிய அனைத்து நேர உயர்வையும் எட்டியது. அதன்படி,தேசிய பங்குச் சந்தையில் ஒரு பங்கு ரூ.7115 ஆக இருந்தது. அதன் முந்தைய முடிவிலிருந்து 10.96 சதவீதம் உயர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக ஏற்றம் அடைந்து வரும் இந்த பங்கு 10.15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்றைய NSE இணையதளத்தின்படி, லார்ஜ் கேப் நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸின் 10 லட்சம் பங்குகள் கைமாறி, நிஃப்டியில் மொத்தம் ரூ.665.83 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.37,591.60 கோடியாக உள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+