இந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Godrej Properties Ltd, பெங்களூருவின் சர்ஜாபுர் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான நிலத்தை வாங்கியுள்ளது. சுமார் 26 ஏக்கர் பரப்பளவிலான இந்த நிலப்பரப்பில், ஆடம்பர குடியிருப்புத் திட்டத்தை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் சுமார் ரூ.1,100 கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Godrej Properties-க்கு, வேகமாக வளர்ந்து வரும் பெங்களூருவின் குடியிருப்புச் சந்தையில் இது ஒரு முக்கியமான விரிவாக்க நடவடிக்கையாகும். தற்போது, புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த நிலம், ஒயிட்ஃபீல்ட், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

சர்ஜாபுர் சாலை பகுதி, தொடர்ந்து வலுவான சந்தை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, அப்பகுதியில் குடியிருப்புக்கான தேவையை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. ஏற்கனவே, Godrej Properties நிறுவனம், Godrej Park Retreat மற்றும் Godrej Lakeside Orchards போன்ற வெற்றிகரமான திட்டங்கள் மூலம் தெற்கு பெங்களூருவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய Godrej Properties நிறுவனத்தின் சி.இ.ஓ. கௌரவ் பாண்டே, "பெங்களூரு இந்தியாவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த ரியல் எஸ்டேட் சந்தைகளில் ஒன்றாகத் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. சர்ஜாபுர் சாலை பகுதி நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. இந்தப் பகுதியில் சமீபத்தில் நாங்கள் நிறைவு செய்த திட்டங்களின் வலுவான செயல்திறன், வாடிக்கையாளர்கள் எங்கள் பிராண்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேவையையும் காட்டுகிறது. அனைத்து பங்குதாரர்களுக்கும் உயர்தரமான குடியிருப்புகளை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், ஜிபிஎல் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் உள்ள டொட்டபல்லாபுர் பகுதியில் 48 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இங்கு 1.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வீட்டு மனைகள் கொண்ட திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இடத்திற்கு விரைவில் போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம், கோத்ரேஜ் தனது ராஜேந்திர நகரில் உள்ள Godrej Regal Pavilion திட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 683 வீடுகளை விற்றதாக அறிவித்தது. நடப்பாண்டில் ஹைதராபாத்தில் ரூ.1,000 கோடி விற்பனை இலக்கைத் தாண்டிய இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இதுவாகும். இந்த வெற்றிகரமான விற்பனைகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள சொகுசு மற்றும் பிரீமியம் குடியிருப்புச் சந்தையில் Godrej Properties-இன் வளர்ச்சி வேகம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications