கூகுள் Adsense-ன் காட்பாதர் என அழைக்கப்படும் கோகுல் ராஜாராம் அடுத்த 9 மாதத்தில் நிறுவனங்கள் தோல்வி அடையும், மூடப்படும், பணிநீக்கம் செய்யும் என எச்சிரித்துள்ளார்.
ரெசிஷன், முதலீடுகள் ஈர்பதில் தொய்வு, வர்த்தக மந்தநிலை, அதிகமான வட்டி விகிதம் என பல முக்கியமான விஷயத்தில் வர்த்தக சந்தை மாட்டிக்கொண்டு உள்ளது. இதனால் பெரிய வங்கிகளே ஐரோப்பாவில் தடுமாறும் நிலையில் சிறு சிறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எம்மாத்திரம்.
இந்தி நிலையில் தான் கோகுல் ராஜாராம் முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிலிக்கான் வேலி பகுதி
அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் குவிந்திருக்கும் சிலிக்கான் வேலி பகுதியில் மிகவும் பிரபலமான முதலீட்டாளராக இருக்கும் ஏஞ்சல் முதலீட்டாளராதக இருக்கும் கோகுல் ராஜாராம் ஈகாமர்ஸ் நிறுவனமான Faire முதல், சமீபத்தில் அடோப் 20 பில்லியன் டாலருக்கு வாங்கிய Figma, collaboration சாப்ட்வேர் நிறுவனமான Airtable வரை என சுமார் 300 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
கோகுல் ராஜாராம்
டெர் ஸ்டார்ட்அப் துறையில் அதிகப்படியான அனுபவம் கொண்ட கோகுல் ராஜாராம் 10 மில்லியன் டாலர் முதலீட்டை பெற்ற அல்லது திரட்டிய நிறுவனங்கள் சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட்-ஐ உருவாக்க முடியாத நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் தங்கள் நிறுவனத்தை முடும் நடவடிக்கையை துவங்கும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனம்
கோகுல் ராஜாராம் ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடு மட்டும் அல்லாமல் கூகுள் AdSense உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர், இதேபோல் பேஸ்புக்-ன் விளம்பர பிரிவின் ப்ராடெக்ட் டைரெக்டர் ஆக இருந்தவர். இந்தியாவில் Cred, Curefit, and Whatfix போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்வது மட்டும் அல்லாமல் Pine Labs போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் உள்ளார்.
சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட்
கோகுல் ராஜாராம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க முக்கியமான காரணம் உண்டு. முன்பெல்லாம் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட் அதாவது product market fit (PMF) உருவாக்கிய பின்பு அதை விரிவாக்கவும், மேம்படுத்தவும் தான் பெரும் தொகையை முதலீடாக திரட்டும்.
பெரும் தொகை
ஆனால் 2020-21ல் பல நிறுவனங்கள் சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட் உருவாக்குவதற்கு முன்பே பெரும் தொகையை முதலீட்டாக பெற்றுள்ளது. இப்படி முதலீடு பெற்ற பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா காலத்தில் உருவான ஐடியாவை அடிப்படையாக கொண்டு முதலீட்டை திரட்டியது, கொரோனா சீசன் முடிந்த உடன் நிலைமை முழுமையாக மாறியுள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்த நிலையில் சந்தைக்கு தேவையான ப்ராடெக்ட்-ஐ உருவாக்க முடியாத நிறுவனங்கள் பெரும் தொகையுடன் சும்மா உட்கார்ந்துள்ளது. எனவே நிறுவனங்களை மூடுவதன் மூலம் முதலீட்டாளர்கள் பகுதி தொகையாவது திரும்ப பெற முடியும் என
கோகுல் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
அடுத்த 9 மாதம்
இதன் மூலம் அடுத்த 9 மாதத்தில் நிறுவனங்கள் தோல்வி அடையும், மூடப்படும், பணிநீக்கம் செய்யும் என கோகுல் ராஜாராம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications