ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

முதலீட்டாளர்களின் பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி, இன்று மீண்டும் ஆட்டத்தை தொடங்கியுள்ளன. இன்று தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த ETF-கள் (Exchange Traded Funds) ஒரே நாளில் 11% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளன.

சமீபத்திய வர்த்தக தினங்களாக அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சந்தையானது உச்சம் தொட தொடங்கியுள்ளது. குறிப்பாக மார்ச் மாத வெள்ளி கான்ட்ராக்ட் கிலோவிற்கு 2.6 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தாண்டியுள்ளது. இதே தங்கம் விலையானது ஏப்ரல் மாத கான்ட்ராக்டில் 2% அதிகரித்து, 1,58,500 ரூபாய்க்கு மேல் காணப்படுகிறது. இந்த ஏற்றத்திற்கு உலகளாவிய பொருளாதார சூழலில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையும், டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகின்றன.

ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

தங்கம் வெள்ளியை பிசிகலாக வாங்குவதற்கு பதிலாக, டிஜிட்டல் முறையில் ETF-களில் முதலீடு செய்தவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் காலமாக அமைந்துள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிரடி ஏற்றத்தால், முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த ஏற்றம் தொடருமா அல்லது இது ஒரு தற்காலிகமான மாற்றமா? விரிவாக பார்ப்போம்.

உச்சத்தில் தங்கம், வெள்ளி இடிஎஃப்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரிப்பின் மத்தியில், யுடிஐ சில்வர் இடிஎஃப் ஆனது 11% அதிகரித்து, 252.08 ரூபாயாகவும், நிப்பான் இந்தியா சில்வர் இடிஎஃப் ஆனது 10% அதிகமாக அதிகரித்து 247 ரூபாயாகவும், ஹெச்.டி.எஃப்.சி சில்வர் இடிஎஃப் மற்றும் டாடா சில்வர் இடிஎஃப் ஆகியவை 10% அதிகமாகவும் ஏற்றம் கண்டுள்ளன.

ஜெரோதா சில்வர் இடிஎஃப், எஸ்பிஐ சில்வர் இடிஎஃப், ஆதித்யா பிர்லா சன் லைஃப் சில்வர் இடிஎஃப், டிஎஸ்பி சில்வர் இடிஎஃப், கோடக் சில்வர் இடிஎஃப், குரோவ் சில்வர் இடிஎஃப் மற்றும் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் சில்வர் இடிஎஃப் ஆகியவை கிட்டத்தட்ட 8% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இதே மிரே அசெட் சில்வர் இடிஎஃப், 360 ஒன் சில்வர் இடிஎஃப், ஆக்சிஸ் சில்வர் இடிஎஃப், மோதிலால் ஓஸ்வால் சில்வர் இடிஎஃப் உள்ளிட்ட பலவும் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 7% வரையில் ஏற்றம் கொண்டிருந்தன.

தங்க இடிஎஃப்-ஐ பொறுத்த வரையில் யூனியன் கோல்ட் இடிஎஃப், ஏஞ்சல் ஒன் கோல்ட் இடிஎஃப் உள்ளிட்ட வரை 3% மேலாகவும், 360 ஒன் கோல்ட் இடிஎஃப், எல்ஐசி எம்.எஃப் கோல்ட் இடிஎஃப், கோடக் கோல்ட் இடிஎஃப், மோதிலால் ஓஸ்வால் கோல்ட் இடிஎஃப், நிப்பான் இந்தியா கோல்ட் இடிஎஃப் மற்றும் எஸ்பிஐ கோல்ட் இடிஎஃப் உள்ளிட்டவையும் 3% வரையில் ஏற்றம் கண்டிருந்தன. இதே ஜெரோதா கோல்ட் இடிஎஃப், ஹெச்.டி.எஃப்.சி கோல்ட் இடிஎஃப், ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் இடிஎஃப், யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் இடிஎஃப் மற்றும் பிற ஃபண்டுகள் 2% வரையில் ஏற்றம் கண்டுள்ளன.

தொடர்ந்து குறுகிய காலத்தில் அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருக்கும் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் குறுகிய கால ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், நீண்ட கால அடிப்படையில் திட்டமிடல் நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+