இந்தியாவின் நுகர்வோர் துறையில் நல்ல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. ஏனெனில் தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகையின் போது பல்வேறு துறைகளிலும் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. மந்தமான பொருளாதார சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, இந்த பண்டிகை சற்று நிம்மதியை வழங்கியுள்ளது. அதிகமான வாடிக்கையாளர்கள் விற்பனை நடந்ததை அடுத்து தங்கம், ஆட்டோமொபைல், பிரீமியம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற விலை மதிப்புள்ள பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்ட மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாகத் தெரிகிறது.
பாரம்பரியமாக தந்தேராஸ் பண்டிகை அன்று மக்கள் தங்கத்தை தான் விரும்பி வாங்குகின்றனர். இந்த ஆண்டு விலை உயர்ந்திருந்தாலும் தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு குறையவில்லை.

முன்னணி நகை பிராண்டான தனிஷ்க் கடைகளில், தந்தேராஸ் பண்டிகைக்கு கூட்டம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. "கடந்த ஆண்டை விட அதிக விற்பனையை எதிர்பார்க்கிறோம்" என்று தனிஷ்க்கின் சந்தைப்படுத்தல் மற்றும் சில்லறை விற்பனை துணைத் தலைவரான அருண் நாராயணன் தெரிவித்துள்ளார். விலை உயர்ந்திருந்தாலும் நகைகள் மீதான ஆர்வம் மக்களுக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாட்டா மோட்டார்ஸ், JSW MG போன்ற முன்னணி கார் தயாரிப்பாளர்கள் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளனர்.
மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனை செய்த 23,000 கார்களை விட இந்த ஆண்டு 40,000 முதல் 42,000 கார்கள் வரை விற்பனை செய்யும் என்று எதிர்பார்க்கிறது. இந்த பண்டிகை சீசன் தொழில் துறைக்கு நன்றாக இருந்தது. எங்களின் சில மாடல்களில் உள்ள ஸ்டாக் ஏற்கனவே தீர்ந்துவிட்டது என்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையின் மூத்த நிர்வாக அதிகாரியான பார்த்தோ பானர்ஜி கூறியுள்ளார்.
JSW MG-இன் எலக்ட்ரிக் கார்கள் அதிக விற்பனையை பெற்றது. அதன் புதிய மாடலான "Windsor" என்ற மாடலும் அதிக விற்பனையைக் கண்டது. டாட்டா மோட்டார்ஸ் அக்டோபரில் 30 சதவீத விற்பனையை பதிவு செய்துள்ளது. தந்தேராஸ் தினத்தன்று சுமார் 15,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
டாடா மோட்டார் பயணிகள் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் மொபிலிட்டி-இன் எம்.டி., ஷைலேஷ் சந்திரா, சில்லறை விற்பனை அதிகரித்ததே இந்த உயர்வுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் அதிக அளவு விற்பனையானது. பிரபலமான ஸ்மார்ட்போன்கள், ஐபோன்கள் முதல் ஓப்போ வரை அதிக அளவில் தேவை இருந்தது. அதே நேரத்தில் பிரிமியம் மற்றும் பெரிய அளவிலான டிவி-களும் அதிக விற்பனையை பதிவு செய்தன.
இந்தியாவில் ஆப்பிளின் பிரீமியம் சில்லறை விற்பனையாளரான யுனிகார்ன் இன்போசொலுஷன்ஸ், புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 16க்கான வலுவான தேவை காரணமாக, கடந்த தந்தேராஸை விட 10% அதிக விற்பனையை பதிவு செய்துள்ளது. மாலை நேரம் வரை கூட்டம் அதிகமாகவே இருந்தது. "இது இரவு நேரம் வரை தொடரும். நுகர்வோர் பிரீமியம் கருவிகள் மற்றும் பெரிய திரையுள்ள தொலைக்காட்சிகளை அதிகமாக வாங்கிக் கொண்டிருக்கின்றனர்" என்று வீட்டு உபயோகப் பொருட்களின் மூத்தத் துணைத் தலைவர் சஞ்சய் சித்காரா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications