2024-ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. புவிசார் அரசியல் பதட்டங்கள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற காரணங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள் ஆகும். 2025 ஆம் ஆண்டிலும் தங்கம் மற்றும் வெள்ளி இதே நிலையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த வருமானத்தை வழங்கியுள்ளது. அதோடு வெள்ளியும் அதற்கு இணையாக 2020-ஆம் ஆண்டு முதல் அதிக வருமானத்தை வழங்கி வருகிறது.
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கம் இன்று வரையில் 26 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதோடு வெள்ளி விலை இந்த 34.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக நாளான டிசம்பர் 31-ஆம் தேதி அன்று ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.1% அதிகரித்து $2,608.09 ஆக இருந்தது.

Image: AI created
இந்தியாவில் 24 தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 180 அதிகரித்து 7,818.3, 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,168.3-ஆகவும் உள்ளது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் சுமார் 170 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் வெள்ளியின் தற்போதைய விலை கிலோவுக்கு 95,000 ரூபாயாக உள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையின்படி, KCM வர்த்தகத்தின் தலைமை சந்தை ஆய்வாளர் டிம் வாட்டர், கொள்கை தளர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்த உதவியது, 2024-ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறப்பான ஆண்டாக இருந்தது என்று கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு கண்ணோட்டம்: 2024-ஆம் ஆண்டைப் போலவே 2025-ஆம் ஆண்டிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் எதிர்காலம் சிறப்பானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் மத்திய வங்கி கொள்கைகள் மற்றும் பணவீக்கம் குறித்த கவலைகள் தொடர்ந்து இருப்பதனால் பலரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதக்கூடும் என்று கணித்துள்ளனர்.
பொதுவாக தங்கத்தின் விலை அமெரிக்காவின் மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை பொறுத்து மாறுபடும். வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் பத்திரம் மற்றும் வங்கி சார்ந்த பிற முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் குறையும் என்பதால் தங்கத்தை நோக்கி நகரக்கூடும்.
கேப்பிட்டல் டாட் காம் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளரான கைல் ரோடா தங்கத்திற்கான தேவைகள் சிறப்பானதாக இருப்பதால் 2025-ஆம் ஆண்டிற்குள் இதேபோக்கு தொடரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் கமாடிட்டி சந்தைகளின் நிலையற்ற தன்மை காரணமாக சில நிபுணர்கள் முதலீடு செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேத்தா ஈக்குவிட்டீஸின் விபி ராகுல் கலந்த்ரி தங்கம் மற்றும் வெள்ளி விலை தற்போது வலுவானதாக இருந்தாலும், பொருளாதார ரீதியான விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க வட்டி விகிதங்கள் மற்றும் பண வீக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த விலையில் மாற்றத்தை கொண்டு வரலாம். எனவே முதலீட்டாளர்கள் அபாயங்களை அறிந்திருக்க வேண்டும். மேலும் விலையேற்ற இறக்கம் ஏற்பட்டாலும். அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications