2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதமாகவும், பிளாட்டினம் இறக்குமதி வரியை 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவித்தது சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருந்தாலும், முக்கியமான ஒரு சலுகை நீக்கப்பட்டது மூலம் தங்கம் வாங்குவோருக்கு பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது.
இதேவேளையில் பட்ஜெட் 2024ல் வந்த மற்றொரு அறிவிப்பு தங்க முதலீட்டாளர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளதால் கலவையான சூழ்நிலையை அளித்துள்ளது. அப்படி என்ன அறிவிப்பு என்று தானே கேட்குறீங்க.

தங்கம் மீதான நீண்ட கால மூலதன லாப வரி விகிதம் 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள அதே சமயம், நீண்டகால முதலீட்டுக்கான கால அளவும் 36 மாதத்தில் இருந்து 24 மாதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், நீண்ட கால முதலீட்டு வரியைக் கணக்கிடும் பணவீக்கம் அடிப்படையிலான இன்டெக்ஸேஷன் சலுகை நீக்கப்பட்டுள்ளது.
தங்கம் அல்லது தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன லாபத்தைக் கணக்கிடும் போது, பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் இன்டெக்ஸேஷன் சலுகை வழங்கப்பட்டது. இதன் மூலம், தங்கம் வாங்கிய விலையை விற்கும் போது அன்றைய பணவீக்க அளவீட்டு இணையாக கணக்கிடப்பட்டு கேப்பிடல் கெயின்ஸ் வரி கணக்கிடப்படும்.
தற்போது இன்டெக்ஸேஷன் சலுகை ரத்து செய்யப்பட்டதால் வாங்கிய விலைக்கும், விற்பனை செய்யப்பட்ட விலைக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசத்தை கேப்பிட்டல் கெயின்ஸ் வரியாக கணக்கிட்டு 12.5 சதவீதம் வரி செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் தங்க முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலம் வைத்திருப்பதால் கிடைக்கக்கூடிய அதிகப்படியான லாபத்தில் பெரும் ஓட்டை விழ உள்ளது.
முன்னதாக, தங்கத்தை மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால், அதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால மூலதன லாபமாகக் கருதப்பட்டு, இன்டெக்ஸேஷன் சலுகை உடன் அதற்கு 20% வரி விதிக்கப்பட்டது.
தற்போது தங்கம் மீதான நீண்ட கால மூலதன லாப வரி விகிதம் 20 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும் இன்டெக்ஸேஷன் சலுகை இல்லாத காரணத்தால் மொத்த லாபத்திற்கும் சேர்த்து வரியைச் செலுத்துவதால் பெரும் தொகையை வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், இனி வரும் காலத்தில் தங்கத்தை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் மட்டுமே நீண்ட கால மூலதன லாப வரி விகிதமான 12.5% செலுத்த வேண்டும். குறைந்த காலத்திற்குள் தங்கத்தை விற்பனை செய்தால், அதன் லாபத்திற்கு வருமான வரி ஸ்லாப் அடிப்படையில் வரி கணக்கிடப்படும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications