தங்கம் யாருக்கு தான் பிடிக்காது, பெண்கள் நகையாகவும், பெரும்பாலான ஆண்கள் தங்க காயின் மற்றும் தங்க கட்டிகளாக வாங்குவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும் வழக்கமாக கொண்டிருப்போம்.
மத்திய அரசு ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் 6 இலக்க HUID நம்பர் இல்லாமல் தங்க நகை மற்றும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை என சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதை எவ்விதமான தளர்வும் இல்லாமால் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது மத்திய அரது. BIS அமைப்பு 6 இலக்க HUID நம்பர் இல்லாத தங்க நகை மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்க தடையும் விதித்துள்ளது
இதனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்க நகை வாங்குபோதும் HUID நம்பர் உள்ளதா என்பதை தெரிந்துக்கொண்டு வாங்குங்கள், HUID நம்பர் இல்லை எனில் வாங்காமல் தவிர்ப்பது உத்தமம்.
HUID எண்
ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) என்பது எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஆறு இலக்க எண்ணெழுத்து குறியீடாகும்.
ஹால்மார்க் செய்யும் நேரத்தில் ஒவ்வொரு நகைக்கும் HUID வழங்கப்படும், மேலும் இது ஒவ்வொரு நகைக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். HUID என்பதன் விரிவாக்கம் Hallmark Unique Identification.
6 இலக்க எண்
அசேயிங் & ஹால்மார்க்கிங் சென்டரில் (AHC) ஒவ்வொரு நகைகளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தனிப்பட்ட எண்ணுடன் முத்திரையிடப்படும். தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கு நான்கு இலக்க HUID வழங்கப்படுகிறது. இதை ஆறு இலக்க HUID ஆக மாற்றப்பட உள்ளது.
முக்கிய விபரங்கள்
HUID விதமுறை வந்த பின்பு இனி ஒவ்வொரு தங்க நகையிலும் BIS லோகோ, purity அளவு, 6 இலக்க HUID ஆகிய 3ம் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஹால்மார்க் விதிமுறை
ஹால்மார்க் விதிமுறையை நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் வேளையில் BIS முத்திரை இல்லாமல் இப்போது யாரும் தங்க நகைகளை விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்த பாதையில் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், மக்களுக்கும் தரமான தங்கத்தை தான் வாங்குகிறோம் என நம்பிக்கையும் அளிக்கும் வகையில் 4 இலக்க HUID எண், தற்போது 6 இலக்க HUID ஆக மாற்றப்பட்டு உள்ளது.
போலி தங்க நகைகள்
இந்தியாவில் போலி தங்க நகைகள் மற்றும் தரம் குறைவான நகைகளை விற்பனை செய்வதை தடுப்பதற்கும், தங்க நகை விற்பனை துறையை ஒழுங்குமுறைப்படுத்தவும் பல கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து விதிக்கப்பட்டு வருகிறது.
எதிர்ப்பு
மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு BIS முத்திரை இல்லாமல் தங்க நகை விற்பனை செய்ய கூடாது என விதிமுறை கொண்டு வந்த போது நாடு முழுவதும் பல எதிர்ப்புகளை கிளம்பினாலும் மெல்ல மெல்ல அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது HUID விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications