அடமானம் வைத்த தங்கத்தை மீட்க முழு பணத்தை செலுத்தியும்.. வங்கிகள் உங்கள் நகையை வைத்திருக்க முடியுமா?

இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இருக்கும் பிரியம் விலையேற்றத்திலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பிற முதலீட்டு திட்டங்களில் இருக்கும் வசதியை காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது எளிதான விஷயம். அதோடு தேவைப்படும் நேரங்களில் தங்கத்தை அடமானம் வைத்து பணம் பெறலாம். கையில் பணம் சேர்ந்து விட்டால் மீண்டும் மீட்டுக் கொள்ளலாம். பிறக் கடன்களை விட இதற்கு வட்டி குறைவு.

தங்கக் கடன் பெறும்போது தங்கத்தை பிணையமாக வழங்க வேண்டும். அதே நேரம் கடனை முழுமையாகச் செலுத்தி விட்டால் உடனடியாக நீங்கள் அடகு வைத்த தங்கத்தை ஒப்படைத்து விடுவார்கள். ஆனால் சில நேரங்களில் கடனை முழுமையாக அடைத்தாலும் நகையை திருப்பிக் கொடுக்காமல் வைத்திருக்க வங்கிகளுக்கு உரிமை உள்ளது. இது எப்போது நிகழும் என்பதை பார்ப்போம்.

அடமானம் வைத்த தங்கத்தை மீட்க முழு பணத்தை செலுத்தியும்.. வங்கிகள் உங்கள் நகையை வைத்திருக்க முடியுமா?

வங்கியின் உரிமை: 1872-ஆம் ஆண்டின் இந்திய ஒப்பந்தச் சட்டம் 171 பிரிவின் கீழ் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை நிலுவையில் வைத்திருந்தால் அந்தத் தொகையை முழுமையாக முடிக்கும் வரை அடகு வைத்த பொருட்களை தடுத்து வைக்கும் உரிமை வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே போல ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஒரு நபர் மற்றொருவருக்காக லோன் பெறும் விண்ணப்பத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் லோன் பெற்றது இவர் கிடையாது. முழு பணத்தையும் மற்றொரு நபரே செலவு செய்துள்ளார். அதை சரிவர வங்கிக்கு திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஜாமீன் கையெழுத்துப் போட்டவர் தன்னுடைய நகையை மீட்க முழு பணத்தையும் செலுத்திய போதிலும் வங்கி அவருடைய நகையை திருப்பி வழங்கவில்லை. இது போன்ற சூழலில் தங்கத்தை வைத்திருக்க வங்கிகளுக்கு அனுமதி உண்டு என்று நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

Also Read

எந்தெந்த சூழ்நிலையில் அடமானம் வைத்த தங்கத்தை வங்கிகள் வைத்திருக்க முடியும்?: உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான அமித்ராஜ் கௌஷல் கூற்றுப்படி, ஒரு வாடிக்கையாளர் அதே வங்கியில் வேறு ஏதாவது கடனை திருப்பிச் செலுத்தாமல் வைத்திருந்தால் வங்கிகள் தாராளமாக அவருடைய நகையை தக்கவைத்துக் கொள்ளலாம். ஒருவேளை கடன் பெற்ற நபர் முழு தொகையையும் செலுத்தி இருந்தாலும் நிலுவைத் தொகை அடையும் வரை தங்கத்தை கொடுக்காமல் தடுத்து வைக்க வங்கிகளுக்கு அனுமதி உண்டு.

எனவே வங்கிகளுக்கு சென்று தங்க கடன் பெறும்போது ஒப்பந்தத்தில் எந்தெந்த விஷயங்கள் இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ஒரே நபர் அதே வங்கியில் வேறு கடன் வைத்திருந்தால் அதற்கு பதிலாக தங்கம் பயன்படுத்தப்படுமா என்பதை தெளிவாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதே சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வது? வங்கி உங்களுடைய நகையை தராமல் வைத்திருந்தால் அதற்கான காரணம் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எந்த கடனையும் மீதம் வைக்காத பட்சத்தில் நீங்கள் வங்கியின் குறைதீர்க்கும் மையத்தில் புகார் அளிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+